அஞ்சலி செலுத்த வந்த சீமானை விரட்டிய சம்பவத்தால் பரபரப்பு!

0
54
seeman

நாகை

நாகையில் உயர் சாதியினரின் பிடியில் சிக்கி இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் எதிர்த்து கேள்வி கேட்டதால் நில உரிமையாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் பிரச்சனை ஏற்பட்டது.

உயிருடன் எரிப்பு

கடந்த 1968ம் ஆண்டு கிறிஸ்துமஸ் சந்தோஷத்தில் மூழ்கி இருந்த சூழலில் வெண்மணி கிராமத்தில் 20 பெண்கள், 19 சிறுவர்கள், 5 ஆண்கள் ஒரே குடிசையில் வைத்து எரிக்கப்பட்டனர்.

நினைவு தினம்

53 வது ஆண்டு இந்த சம்பவத்தின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. 44 பேர் இறந்த குடிசையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

வீர வணக்கம்

வீர வணக்கம் செலுத்துவதற்காக முழக்கமிட்டவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தடுத்தனர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டதால் சீமானை காவல்துறையினர் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர்.

சோகம்

நாம் தமிழர் கட்சி பேச்சாளருக்கு மேடையிலேயே தர்ம அடி விழும் சம்பவத்தை தொடர்ந்து கீழ்வெண்மணியில் சீமானை திட்டி விரட்டி விட்ட சம்பவம் தம்பிகளுக்கு சோகத்தை அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here