அஞ்சல் சேமிப்பில் நீங்கள் அபராதம் கட்ட வேண்டியது

0
74
post-office- scheme

மக்கள் பெரும்பாலும் சேமிப்பை வைத்திருக்கும் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் எதற்கெல்லாம் அபராதம் விதிக்கப்படுகிறது என பார்க்கலாம்.

ஒரு நல்ல சேமிப்பு திட்டத்தை தேடும் மக்களுக்கு இந்த ரெக்கரிங் டெபாசிட் திட்டம் சிறந்ததாக உள்ளது. இந்த திட்டம் மூலமாக மாதம் பணம் செலுத்தி, வட்டியுடன் முதிர்வு தொகையை பெற முடியும். இந்த திட்டம் தபால் நிலையங்களில் மட்டும் அல்லாது வங்கிகளிலும் நடைமுறையில் உள்ளது. இந்த சேமிப்பானது 5 ஆண்டுகள் நடைபெறும். மேலும் 5.8% வட்டியை இந்த சேமிப்பின் மூலம் பெறலாம். இந்த சேமிப்பில் இவ்வளவு தொகை என கணக்கு கிடையாது. உங்களால் முடிந்தவரை போடலாம். நீங்கள் தனியாகவோ இல்லை சேர்ந்தோ முதலீடு செய்ய முடியும்.

ரெக்கரிங் கணக்கை 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடர விரும்பினால் அதற்கும் வாய்ப்புள்ளது. இந்த சேமிப்பானது பத்து ஆண்டுகள் சேமிக்க முடியும். ரெக்கரிங் கணக்கு வைத்திருப்பவர் தொடர்ந்து 4 மாதங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தேதியில் சேமிப்பை டெபாசிட் செய்ய முடியாவிட்டால் பரவாயில்லை. அதுவே 4 மாதங்களுக்கு மேல் தொடர்ந்தால் அப்போது சிக்கல் ஏற்படுகிறது.

சேமிப்பு 4 மாதங்கள் தொடர்ந்து போடாவிட்டால் தவணை செலுத்தாதவராக அறிவித்து கணக்கு மூடப்படும்.மேலும் அபராத தொகையும் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.சேமிப்பை மீண்டும் தொடர்பவர்கள் இந்த அபராத தொகையினை கட்ட வேண்டும். மேலும் கணக்கை திறக்க விரும்பவில்லை என்றால், முன்கூட்டியே திரும்ப பெற உதவும்.

ரெக்கரிங் திட்டத்தில் இருப்பவர்கள் தவறாமல் மாத தவணையை கட்ட வேண்டும். இதனை அனைவரும் மறவாதீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here