அதிர்ச்சியான போட்டி நிறுவனங்கள் – டாடா தரமான சம்பவத்தை செய்து அசத்தல்

0
44
tata cars

எலக்ட்ரிக் கார்கள்

நவம்பர் மாதம் டாடா நிறுவனம் 1,751 எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டாடா மோட்டார்ஸ் 413 எலக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. தற்போது நெக்ஸான் எலக்ட்ரிக் எஸ்யூவி, டிகோர் எலக்ட்ரிக் கார் ஆகியவற்றை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

விற்பனை எண்ணிக்கை

ஒட்டுமொத்தமாக கடந்த நவம்பர் மாதம் 29,778 கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது. எலக்ட்ரிக் , பெட்ரோல், டீசல் கார்கள் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையாக உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 21,641 கார்களை மட்டுமே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
8,137 கார்கள் அதிகமாக விற்பனை செய்து 37.60 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக விற்பனை செய்த கார்களில் ஐசி இஞ்சின் கார்கள் 28,027 ஆகும்.

டீசல் கார்களின் வளர்ச்சி

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 1,751 எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனையை 32% வளர்ச்சியை தந்துள்ளது.

ஐசி இன்ஜின் கார்

தற்போதைய நிலையில், டியாகோ, டிகோர், சஃபாரி, அல்ட்ராஸ், நெக்ஸான், பன்ச் போன்ற ஐசி இன்ஜின் கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்து வருகிறது. டிகோர் , நெக்ஸான் எலெக்ட்ரிக் வெர்ஷன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

tiger in mudumalai
Tata Tirgo

நிறுவனத்தின் பெருமை

டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் விற்பனை சிறப்பாக இருந்து வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற கார்களை விற்பனை செய்யும் இந்திய நிறுவனம் என்ற பெருமை இந்த நிறுவனத்திற்கு இருக்கிறது.

சோதனை

குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்ஸான், அல்ட்ராஸ் , பன்ச் ஆகிய கார்கள் பெற்று அசத்தியுள்ளது.

tiger in mudumalaiiiii
Tata Nexon

பாதுகாப்பு

வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குகின்றனர் . காரானது மோதல் சோதனைகளில் எத்தனை ஸ்டார்களை வாங்கியுள்ளது என்பதையும் பார்க்கின்றனர். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்களுக்கு பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இந்த விஷயத்தில் ‘டிக்’ அடிக்கின்றனர்.

பாதிப்பு

உலகளாவிய அளவில் செமிகண்டக்டர் சிப்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கார்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு விற்பனை குறைந்துள்ளது. இந்த சூழலிலும் டாடா சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது.

tiger in mudumalaihh
Tata safari

தகவல்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்னும் நிறைய கார்களை அறிமுகம் செய்யவுள்ளது. அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பன்ச் காரின் எலெக்ட்ரிக் , சிஎன்ஜி வெர்ஷன்களையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here