அதிர்ச்சியூட்டும் பின்னணி..6 மாத குழந்தை நரபலி..

0
64
kulaintai

தஞ்சை மாவட்டத்தின் அருகே உள்ள மல்லிப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் நசுருதீன். இவரது மனைவி சாலிகா. இந்நிலையில் அந்த குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்து விட்டதாக கூறினார் . காவல் துறைக்கு தகவல் தெரிவிக்காமல் உறவினர்களிடம் மட்டும் கூறியுள்ளார் . பின் அவசர அவசரமாக குழைந்தையை அடக்கம் செய்துள்ளனர்.

காவல்துறை

இந்நிலையில் குழந்தையை நரபலி கொடுக்கப்பட்டதாக உறவினர்கள் மூலம் தகவல் பரவியது. பின் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து சேதுபாவாசத்திரம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர் . காவலதுறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணையை தொடங்கியுள்ளார் .

விசாரணை

விசாரணையின் போது குழந்தை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்தது. இது சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணையில் போலீசார் ஈடுப்பட்டனார் . உறவினர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரனையில் குழந்தை தண்ணீரில் மூழ்கடித்து நரபலி கொடுத்த தகவல் வெளியாகியுள்ளது.

உயிர்பலி

குழந்தையின் அப்பா நசுருதீனின் சித்தப்பாவான அசாருதீன் என்பவர் இவர் வயது 52 இவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது இதனால் புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிபட்டினத்தில் உள்ள கேரளாவைச் சேர்ந்த மந்திரவாதி முகமது சலீம் என்பவபர் இவர் . உடல்நலக் குறைபாடு, குடும்பத்தில் பிரச்சினைகளுக்கும் உயிர்பலி கொடுத்தால் சரியாகிவிடும் என்று கேரள மந்திரவாதி கூறியிருக்கிறார் என தெரியவந்தது .

வாக்குமூலம்

இதை நம்பி சில தினங்களுக்கு முன் அசாருதீன் சேவல்களை பலி கொடுத்துள்ளனர். இருந்தாலும் பிரச்சினை தீரவில்லை என்று கூறப்படுகிறது. திரும்பவும் கேரள மந்திரவாதியை சந்தித்துள்ளனர் . அப்போது முகமது சலீம் வீட்டில் உள்ள யாரையாவது நரபலி கொடுத்தால் பிரச்சினை சரியாகி விடும் என்று கூறியுள்ளார் . அதனை உடனே செய்ய வேண்டும் என சொன்னதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளர் . என கூறப்படுகிறது.

சர்மிளா

குழந்தையை கொன்றால் பிரச்சினை தீரும் என நினைத்து சர்மிளா புதன்கிழமை இரவு குழந்தை ஹாஜரா உறவினர்கள் உறங்கும் போது யாருக்கும் தெரியாமல் குழைந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்ததாக தகவல் வெளியானது .இதன்முலம் புதைக்கப்பட்ட குழந்தையை தோண்டி எடுக்கப்பட்டது . மந்திரவாதியின் தவறான அறிவுரையால் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் , சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here