அனுமனுக்கு வெற்றிலை மாலை போடும் வழக்கம் எப்படி வந்தது ?

0
135
அனுமன்

இலங்கைக்கு சிறையில் வைக்கப்பட்ட சீதையைக் கண்டு பிடிக்க அனுமன் புறப்பட்டர் . நீண்ட நேரமாக தேடினர் பிறகு சீதை அசோக வனத்தில் இருப்பதை அவர் கண்டு பிடித்தார். ராமர் நலமாக உள்ள என சீதையிடம் அனுமன் அறிவித்தார் . பிறகு ராமர் கொடுத்த மோதிரத்தை சீதா தேவியிடம் கொடுத்தார் ஆஞ்சநேயர். சீதாதேவி மகிழ்ச்சியடைந்தார்.

சீதா தேவி

பணிவுடன் வணங்கி நிற்கும் ஆஞ்சநேயருக்கு அட்சதை போட்டு ஆசீர்வதாம் செய்ய வேண்டும் என்று சீதாதேவி ஆசைபட்டார். ஆனால் சீதைக்கு அனுமனை அட்சதை செய்ய பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.

அனுமன்

அப்போது சீதையின் அருகில் வெற்றிலைக் கொடியில் இருந்து இலைகளைப் பறித்து அதை அனுமன் மீது போட்டு ஆசீர்வதித்தார் . பின் அந்த வெற்றிலைகளை மாலையாகவும் கட்டி அனுமனுக்குப் சூடி மிகவும் மகிழ்ச்சியடைந்தார் . இதை ஆஞ்சநேயரும் மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். அன்று முதல் அனுமனுக்கு வெற்றிலை மாலை போடுவர் .

வெற்றிலை மாலை

நாம் படைக்கும் வெற்றிலைகள் அனுமனுக்கு மிகவும் சிறப்பநதாக மாறுகிறது. அனுமனுக்கு வெற்றிலை மாலை அணியும் போது வெற்றிலையின் எண்ணிக்கை இரட்டைப்படை எண்ணிக்கையில் இருக்க வேண்டும். வெற்றிலையுடன் வைக்கப்படும் பாக்கின் எண்ணிக்கையும் ஒற்றைப்படை எண்ணிக்கையில் இருக்கவேண்டும் .

வியாபாரம்

பக்தர்கள் நேர்த்திக்கடனாக வெற்றிலை மாலையும் போடுகிறார்கள் . வேலூர் , கரூர் மாவட்டத்தில் வெற்றிலை வியாபாரம் செய்துவருகிறார்கள்.வெற்றிலை விவசாயிகள் தங்களுடைய பயிரில் நோய் வராமல் வெற்றிலையை அறுவடை செய்து வெற்றிலை மாலையை காணிக்கையாக செலுத்துகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here