Automobile Tamil News 2022 : அப்டேட் செய்யப்பட்டு வெளியாகும் சிட்ரோன் சி5 பேஸ்லிஃப்ட்!

0
53
car

படங்கள்

கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் சிட்ரோன் சி5 பேஸ்லிஃப்ட் காரின் படங்கள் இணைய தளங்களில் வெளியாகின. தற்போது அதிகாரபூர்வமாக சிட்ரோன் சி5 காரின் படங்கள் வெளியாகியுள்ளன.

ஐரோப்பா

முதலாவதாக ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள காரில் தற்கால ட்ரண்டிற்கு ஏற்ப எல்இடி விளக்கு வழங்கப்பட்டுள்ளது. இரு கிடைமட்ட எல்இடி ஸ்ட்ரிப்களுடன் நேர்த்தியான கிரில் பகுதி போன்றவற்றுடன் முற்றிலுமாக அப்டேட் செய்யப்பட்டுள்ளது. சிறிய எல்இடி விளக்குகளையும் இதில் காண முடிகிறது.

Capture cleanup26

அம்சங்கள்

புதிய டிசைன் கொண்ட 18 இன்ச் சக்கரங்கள் இதில் உள்ளது. பளபளப்பான கண்ணாடி, மேற்கூரை கம்பிகள், செவ்வக வடிவிலான பக்கவாட்டு ஸ்கூப்ஸ் போன்றவை வெளிப்புறத்தில் காணப்படுகிறது. மசாஜிங் இருக்கைகள் இதில் காணப்படுகிறது.

பேட்டரி

ஐரோப்பாவில் பெட்ரோல், டீசல் தேர்வுகளில் 2022 சி5 மாடல் விற்பனையை துவங்கவுள்ளது. இதில் 13.2 கிலோவாட் பேட்டரி மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது. எலக்ட்ரிக் ஆற்றலில் மட்டும் கிட்டத்தட்ட 55 கிலோமீட்டர் தொலைவிற்கு காரை இயக்கி செல்ல முடியும்.

Capture cleanup25

விலை

இந்த ஆண்டின் துவக்கத்தில் சி5 காரின் விலையை 1 லட்சம் ரூபாய் உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here