அமெரிக்காவிடம் இருந்து ட்ரோன்களை வாங்கும் இந்தியா

0
72
drone

பல சிறப்பம்சங்களை கொண்ட ட்ரோன்களை இந்தியா அமெரிக்காவிடமிருந்து வாங்கவுள்ளது.

எம்.க்யூ -9பி சிறிய ரக விமானங்களை வாங்குவதற்கான கவுன்சில் சில வாரங்களில் ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.பிறகு நரேந்திரமோடி தலைமையிலான குழுவுக்கு அனுப்பப்படும்.

drone3

தரையில் இலக்குகளை தாக்கி அளிப்பதற்கான அந்த ட்ரோன்களை இந்தியா வாங்கவுள்ளது.இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டிலேயே இது நிறைவேற்றப்படும் என தெரிகிறது. அமெரிக்காவிடம் இருந்து வாங்கும் ட்ரோன்களை ராணுவம்,விமானப்படை,கடற்படை ஆகியவற்றிற்கு வழங்கப்படும் என்கிறார்.

அமெரிக்காவிடம் இருந்து வாங்கும் 30 ட்ரோன்கள் தொடர்ச்சியாக 35 மணிநேரம் வானில் பறக்கும் தன்மை உடையது. கண்காணிப்புக்கு சிறந்ததாக விளங்குகிறது.உளவு அறிதலுக்கும் இந்த ட்ரோன்கள் சிறந்து விளங்கும் என அறியப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here