அமேசான் தளத்தில் சிறந்த அம்சங்களுடன் கிடைக்கும் 5 விவோ ஸ்மார்ட்போன்கள்

0
68

உலகம் முழுவதும் விவோ நிறுவனத்தின் போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தரமான டிஸ்பிளே, கேமரா வசதி போன்றவற்றால் இந்த நிறுவனத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

அமேசான் தளத்தில் கிடைக்கும் போன்கள்:

விவோ ஒய்72 5ஜி

விவோ ஒய்72 5ஜி 8 ஜிபி ரேம், 128ஜிபி மெமரி கொண்ட இந்த போனின் விலை ரூ.20,990 ஆக உள்ளது. 6.58- இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே கொண்டது. 1,080x 2,408 பிக்சல்கள், ஆக்டோ- கோர் குவால்காம், எஸ்ஓசி சிப்செட் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது. இந்த போனின் பின்புறம் 48 எம்பி பிரைமரி சென்சார் + 2 எம்பி டெப்த் என இரண்டு கேமராக்கள் உள்ளன. செல்பீக்களுக்கும், அழைப்புகளுக்கும் 8எம்பி கேமரா ஆதரவை கொண்டுள்ளது.

விவோ வி21 5ஜி

அமேசான் தளத்தில் ரூ.29,990 விலையில் விற்கப்படும் விவோ வி21 5ஜி ஸ்மார்ட் போன் 8ஜிபி ரேம் 128 ஜிபி மெமரி கொண்டுள்ளது. 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் , 1080 x 2404 பிக்சல் தீர்மானம் , எச்டிஆர் +, 800 நைட்ஸ் வசதி உள்ளிட்ட சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது. இதில் குறிப்பாக மீடியாடெக் டைமென்சிட்டி 800யு பிராஸர் வசதி ஆகியவை இடம்பெற்றுள்ளது. இதன் பின்புறம் 64எம்பி மெயின் சென்சார்+ 8 எம்பி ஆங்கிள் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ லென்ஸ் என மூன்று கேமெராக்களை கொண்டுள்ளது. வீடியோ கால் அழைப்புக்கு 44 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 4000 எம்எச் பேட்டரி , கைரேகை சென்சார் ஆகிய அசத்தலான அம்சங்களை கொண்டுள்ளது.

விவோ எக்ஸ்60 ப்ரோ

12ஜிபி ரேம் மற்றும் 256 மெமரி கொண்ட இந்த போனை அமேசான் வலைத்தளத்தில் ரூ. 49,990 விலையில் கிடைக்கும். 6.56 இன்ச் டிஸ்பிளே, எச்டிஆர் 10 பிளஸ் கைரேகை சென்சார் ஆகியவை உள்ளது. 4,200 எம்எச் பேட்டரி, 48 எம்பி கேமரா, 13 எம்பி இரண்டாம் நிலை கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 870 ஆக்டோ-கோர் சிப்செட் வசதி உள்ளன.

விவோ ஒய் 73

அமேசான் தளத்தில் ரூ 20,990 விலையில் கிடைக்கும் இந்த போன் 8ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வசதி கொண்டது.6.44 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 1080x 2400 பிக்சல் தீர்மானம், மீடியாடெக் ஹீலியோ ஜி95 எஸ்ஒசி சிப்செட் வசதி, பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது. 4ஜி, டூயல் சிம், புளூடூத் 5.0, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது.

விவோ எக்ஸ் 60

அமேசான் தளத்தில் ரூ.34,990 விலை கொண்ட இந்த போன் 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி கொண்டது. 6.56 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே, கைரேகை சென்சார், 48 எம்பி கேமரா, 13 எம்பி இரட்டை கேமரா, முன்பக்கத்தில் 32 எம்பி செல்பி கேமரா சேவையும் இதில் இருக்கிறது. ஆண்ட்ராய்டு 11 மூலம் இயக்கப்படும் 4300 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜிங் ,குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 ஆக்டோ-கோர் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here