விமான நிலையத்திற்கு சென்ற பாதுகாப்பு வாகனம் கவிழ்ந்தது – 5 பேர் படுகாயம்!

0
75
amaichar

அமைச்சர்

அமைச்சர் சென்னையில் இருந்து விமானம் வழியாக மதுரைக்கு சென்றார். அவரை அழைத்து வர புதுக்கோட்டையிலிருந்து போலீஸ் பாதுகாப்பு வாகனம் சென்றது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வாகனம் சென்று கொண்டிருந்தது. அங்கு ஒரு மாடு வந்ததால் மாட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

பள்ளம்

வாகனம் சாலை அருகில் இருந்த பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்துள்ளது. விபத்தில் சிவகுருநாதன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 5 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் வாகனம் கவிழ்ந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்த 5 நபர்களையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிகிச்சை

மேல்சிகிச்சைக்காக 5 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். வாகனம் கவிழ்ந்ததை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் விபத்துக்குள்ளானது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here