அரசு உதவித் தொகைக்காக சகோதரியை திருமணம் செய்த சகோதரன்!

0
69
marriage

உதவித்தொகை

ஏழை குடும்பங்களில் திருமண செலவை ஏற்கும் நோக்கில் பல்வேறு மாநிலங்களில் திருமண உதவித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டமானது உத்திரபிரதேச மாநிலத்திலும் செயல்பட்டு வருகிறது. இந்த அரசு திருமண உதவித்தொகையை பெறுவதற்காக ஒருவர் செய்த தில்லுமுல்லு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

51 ஏழை ஜோடிகள்

பெரோசாபாத் மாவட்டத்தில் உள்ள நுந்தலா பகுதியில் சமூக நலத்துறை சார்பில் முதலமைச்சரின் திருமண உதவித்தொகை திட்டத்தில் 51 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு 35 ஆயிரம் ரூபாய் பணமும், பரிசு பொருள்களும் வழங்கப்பட்டது.

அதிர்ச்சி தகவல்

உதவித்தொகை விவரங்களை சரிபார்க்கும் போது அதிகாரிகளுக்கு ஒரு அதிர்ச்சியான தகவல் கிடைத்தது. திருமணம் செய்து கொண்ட 51 ஏழை ஜோடிகளில் ஒரு தம்பதி சகோதரன் – சகோதரி என தெரிய வந்துள்ளது.

தில்லுமுல்லு

அரசின் திருமண உதவி தொகையை பெறுவதற்காக இந்த தில்லுமுல்லு செய்தது கிராமத்தில் உள்ள மக்கள் மூலம் அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது.

விசாரணை

அதிகாரிகளை ஏமாற்றி திருமணம் செய்த அவர்களை விசாரணை நடத்தினர் அதிகாரிகள். இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ஆவணங்கள் உறுதி செய்யப்பட்டு உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here