ஆசிரியர்களின் பணிகளுக்கு விடியல் கிடைக்குமா?

0
42
teachers

ஆசிரியர்கள்

தமிழக முதல்வர் அறிவித்தபடி பணிநிரந்தர அறிவிப்பை வெளியிடுவாரா என ஆசிரியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தொகுப்பூதியம்

தமிழக அரசு பள்ளிகளில் 2012ம் ஆண்டு 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி, தையல், கட்டடக்கலை போன்றவற்றில் 5,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் பணியில் அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். தற்போது 12,483 பேர் பத்தாயிரம் தொகுப்பூதியம் பெற்று வருகிறார்கள்.

கோரிக்கை

பகுதி நேரமாக அறிவிக்கப்பட்ட போதும் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக இந்த வகை ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். இருப்பினும் இவர்களுக்கு குறைந்தபட்சம் ஊதியமே வழங்கப்படுகிறது. ஆசிரியர்களை நிரந்தரம் செய்வதை போலவே பகுதி நேர ஆசிரியர்களையும் பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாநில ஒருங்கிணைப்பாளர் கூற்று

பணி நிரந்தரம் செய்வோம் என பள்ளிக்கல்வி அமைச்சரும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். பணி நிரந்தரம் செய்வதற்கான அரசாணையை வெளியிட வேண்டுவதாகவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here