ஆசைவார்த்தைகளை நம்பி பறிபோன தங்கசெயின்!

0
53
kutram

மதுரை

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்த நவீன்குமார் கும்பகோணத்தில் ஹோமியோபதி மருத்துவ படிப்பு படித்து வருகிறார். இவருக்கு பேஸ்புக்கில் மதுரை செல்லூர் மீனாட்சிபுரத்தை சேர்ந்த சுப்புராஜ் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

ஆசை வார்த்தை

இருவரும் நட்பாக பேசி பழகி வந்த நிலையில் சுப்புராஜ் மாணவர் நவீன்குமாரிடம் தனது நண்பரது வீட்டில் அழகான இளம்பெண் உள்ளதாகவும் நீ வந்தால் உல்லாசமாக இருக்கலாம் என்றும் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். உமா வைத்தீஸ்வரி என்ற பெண்ணின் புகைப்படத்தை அனுப்பி நவீன்குமாரை அழைத்துள்ளார்.

மிரட்டல்

நவீன்குமாரும் பெண்ணுடன் உல்லாசமாக இருக்கலாம் என்ற நினைப்பில் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற நவீன் குமார் இளம்பெண்ணுடன் பேசி கொண்டிருந்தபோது வீட்டில் இருந்த சுப்புராஜ் மற்றும் அவரது நண்பர்கள் கத்தி முனையில் மிரட்டி உள்ளனர்.

தங்க செயின்

நவீன்குமாரிடம் இருந்து 2 சவரன் தங்க செயின் மற்றும் பணத்தை பறித்து துரத்திவிட்டுள்ளனர். நவீன்குமார் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ஒன்றும் செய்ய முடியாமல் வீட்டிற்கு சென்றுள்ளார்.

புகார்

நவீன்குமார் புகார் அளிக்க மாட்டான் என கருதிய கும்பல் அங்கேயே இருந்துள்ளனர்.துணிந்த நவீன்குமார் நாகைமலை புதுக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.போலீசார் அதிரடியாக வாலிபர் கூறிய முகவரிக்கு சென்று நகை பறித்து சென்ற நபர்களை வளைத்து பிடித்தனர்.

கைது

நகை பறிப்பில் ஈடுபட்டவர்களை பிடித்து நவீன்குமாரின் செயினை மீட்டனர். அந்த கும்பலில் இருந்த அனைவரையும் கைது செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here