ஆண்களின் துணையில்லாமல் பெண்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய கூடாது; தலிபான் அமைப்பு உத்தரவு !!!!

0
68
thalipar

ஆண்களின் துணை இல்லாமல் பெண்கள் துார பயணம் செய்ய கூடாது என்று தலிபான் பயங்கரவாத அமைப்பு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கட்டுப்பாடுகள்

ஆப்கானிஸ்தான் நிர்வாகத்தை ஒரு சில மாதங்களுக்கு முன் தலிபான் அமைப்பு கைப்பற்றியது. 1990ல் பெண்களுக்கு அதிக கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்திருந்தனர். இப்பொழுது மீண்டும் நிர்வாகம் அவர்களிடம் வந்துள்ளதால் பெண்கள் பயப்பட்டுள்ளன. பள்ளிகளில் மேல்நிலைப் படிக்கும் பெண்களுக்கு படிக்க அனுமதி இல்லை. தலிபான் வெளியிட்டுள்ள உத்தரவில் டிவி சேனல்களில் உள்ள பெண்கள் முழு உடலை மறைக்கும் ஆடைகளை மட்டும் அணிய வேண்டும் என்று தலிபான்கள் குறிப்பிட்டு இருந்தனர்.

உத்தரவு

பெண்களுக்கு புது உத்தரவு இடப்பட்டுள்ளது. 72 கி.மீ துாரத்துக்கு மேல் பயணத்தின்போது ஆண்கள் இல்லாமல் பெண்கள் பயணிக்க தடை விதித்துள்ளது. அந்த ஆண் நெருங்கின சொந்தமாக இருக்க வேண்டும். முழு உடலை மறைக்கும் ஆடைகளை போட்டால் மட்டுமே பெண்கள் பயணம் செய்ய முடியும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல்

தேர்தல் கமிஷன் ஆப்கானிஸ்தான் மற்றும் தேர்தல் புகார் கமிஷன் ஆகியவைகளை கலைப்பதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். இந்த அமைப்புக்கு தேவை எதுவும் இல்லை என்று தலிபான்கள் குறிப்பிட்டுள்ளனர். மாகாண அளவிலான அமைதி மற்றும் பார்லிமென்ட் அமைச்சகங்களை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளன . பெண்களின் விவகாரத் துறை அமைச்சகத்தை தலிபான்கள் மூடியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here