ஆப்பு அடிச்சாங்களா : கொஞ்ச நஞ்ச பேச்சா பேசினிங்க !!!

0
54
rowdy baby surya

ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கா கைது :

“யூடூப்பில்” தவறாக பேசிய ‘‘டிக் டாக்’’ ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது நண்பன் சிக்கா இருவரையும் போலீசார் கைது செய்தனர். ரவுடி பேபி சூர்யா ரவுடி பேபி என்ற பெயரில் டிக் டாக் செய்து பிரபலமானார். அடிக்கடி தவறாக பேசி பதிவுகளை வெளியிட்டு வந்துள்ளார்.

ஆபாசமாக பேசிய ரவுடி பேபி சூர்யா

கோவை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் யூ டியூப் சேனலை நடத்தி வருகிறார். சேனலில் வரும் நிகழ்ச்சிகளை ரவுடி பேபி சூர்யா ஆபாசமாக பேசியுள்ளார். சில நாட்களுக்கு முன் சூர்யா மற்றும் அவரது நண்பர் சிக்கா என்பவரும் அந்த பெண்ணை கேவலமான முறையில் யூ டியூபில் பேசியுள்ளனர்.

போலீசில் புகார்

இதன் தொடர்பாக பெண்ணும் அவரது கணவரும் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர். ரவுடி பேபி மற்றும் சிக்காஆகியோர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாசமாக பேசியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர் . மதுரையில் ஒளிந்திருந்த சூர்யா, சிக்கா இருவரையும் சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here