ஆரோக்கிய குறைபாடுகளை ஏற்படுத்தும் உலர் பழங்கள்

0
66

உலர் பழங்கள் அதிகமாக உட்கொண்டால் ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. உலர் பழங்களை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளை குறித்து இதில் பார்ப்போம்.

எடை அதிகரிப்பு

250 கலோரி அளவு உலர் பழங்கள் உட்கொள்வதால் ஒரு கிலோ உடல் எடை அதிகரிக்கும். பேரீச்சம் பழம், புளூபெர்ரி, அத்திப்பழம் சாப்பிடுவது 60 கலோரிகளை வழங்கும் திறன் உள்ளது. அதனால் சாப்பிடும் உலர் பழங்களின் கலோரி அளவை கருத்தில் கொண்டு சாப்பிட்டால் சிறந்தது.

பற் சிதைவு

உலர் பழங்களில் பிரக்டோஸ் வடிவத்தில் சர்க்கரை இருக்கிறது.
உலர்பழங்களை சாப்பிட்ட உடன் தண்ணீர் பருகுவது நல்லது. இது பற் சிதைவு அபாயத்தை குறைக்க உதவும். உலர்பழங்கள் போன்ற இனிப்பு வகைகளை சாப்பிட்டதும் பல் துலக்குவது , வாய் கொப்பளிப்பது பற்களில் இருக்கும் சர்க்கரையை அகற்ற உதவும்.

வயிற்று பிரச்சனை:

உலர் பழங்களில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. குடலின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த நார்ச்சத்தின் பங்களிப்பு முக்கியமானது. உலர்ந்த பழங்களை அதிகமாக உட்கொள்வது வீக்கம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். உலர் பழங்களை குறைவாக உட்கொள்வது உடலுக்கு பாதுகாப்பானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here