இடஒதுக்கீட்டின் அடிப்படையில் முதுகலை படிப்பிற்கான கவுன்சிலிங்கை நடத்த அனுமதி!

0
54
நீதிமன்றம்

இடஒதுக்கீடு

மருத்துவ மாணவர்களுக்கு 27% ஓபிசி இடஒதுக்கீடு என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்ததால் கடந்த ஆண்டு அக்டோபரில் முதுகலை மருத்துவ கவுன்சில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கவுன்சிலிங்

உயர்சாதி ஏழைகளுக்கான வருமான வரம்பு 8 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது குறித்த கேள்விகளை உச்சநீதிமன்றம் கேட்ட நிலையில் கவுன்சிலிங் நடத்த அனுமதியை வழங்கியுள்ளது. மார்ச் 3வது வாரம் விரிவான தீர்ப்பை உயர்சாதி ஏழையினருக்கான இடஒதுக்கீடு குறித்து வழங்கவுள்ளது.

வழக்கு

மருத்துவ மேற்படிப்பில் உயர்சாதியினருக்கு 10சதவீத இடஒதுக்கீடும், ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு என அறிவித்ததை எதிர்த்து பல தரப்பினரும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அனுமதி

இந்த இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 2021 ஆம் ஆண்டுக்கான முதுநிலை படிப்பிற்கான கவுன்சிலிங்கை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் அனுமதியினை அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here