இணையத்தில் குக்கர் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

0
82
pressure-cooker

வணிக நிறுவனம்

விதிமுறைகளை மீறி ஐஎஸ்ஐ முத்திரை அல்லாத பிரஷர் குக்கர்களை விற்கும் வணிக நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சட்டம்

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 18(2) பிரிவின் கீழ் உள்ள அதிகாரங்களை பயன்படுத்தி ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத வீட்டு உபயோக பொருள்களை வாங்க வேண்டாம் என நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அறிவித்துள்ளது.

முத்திரை

காயங்கள் ,பாதிப்புகள் ஏற்படுவதிலிருந்து நுகர்வோரை பாதுகாக்கவும், தொழில்நுட்ப தரநிலைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும் அலுவலக சட்டத்தின் கீழ் அரசு முத்திரையை கட்டாயமாக்கி உள்ளது.

தண்டனை

மத்திய அரசால் தர முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ள பொருள்களின் சட்டவிரோத உற்பத்தி, இறக்குமதி, வாடகை போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது. இரண்டு வருடம் சிறை தண்டனை மற்றும் 5 லட்சம் பணம் விதிகளை மீறுவோருக்கு வழங்க இந்த சட்டத்தில் இடம் உள்ளது.

நோட்டீஸ்

விதிமுறைகளுக்கு எதிராக பிரஷர் குக்கர்களை இணையத்தில் விற்கும் விற்பனையாளர்களுக்கு 15 நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது. நடவடிக்கை எடுக்க இந்த வழக்குகள் தரநிலை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here