இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அருணாச்சல பிரதேசம் மத்திய அரசு உறுதி

0
68
mathiya arasu

சீனா

அருணாச்சல பிரதேச மாநிலத்தை சீனா சொந்தம் கொண்டாடி வரும் நிலையில் அந்த மாநிலத்தில் உள்ள 15 இடங்களுக்கு சீன பெயர்களை வெளியிட்டு இருக்கிறது. அருணாச்சல பிரதேசத்துக்கு உட்பட்ட 8 குடியிருப்பு பகுதி, 4 மலை, 2 ஆறுகள் ஆகியவற்றுக்கு ரோமன் எழுத்துக்களில் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

பெயர்

சீன அமைச்சரவை மற்றும் மாநில கவுன்சில் வழங்கிய விதிமுறைகளுக்கு ஏற்ப இந்த பெயர்கள் சூட்டப்பட்டு இருப்பதாக சீன அரசு தெரிவித்துள்ளது. 2017ம் ஆண்டு இந்த பகுதியை சேர்ந்த 6 பகுதிகளுக்கு சீனா புதிய பெயரினை சூட்டியுள்ளது.

உண்மை

சீன அரசின் நடவடிக்கைக்கு மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது. அருணாச்சல பிரதேசமானது இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களின் புதிய பெயர்களை ஒதுக்குவது இந்த உண்மையை மாற்றாது என திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here