இந்தியா மற்றும் சீனா பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு

0
49
india china flag flying

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கிழக்கு லடாக்கில் உள்ள எஞ்சிய பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காண்பது என இந்தியா மற்றும் சீனா முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்திய சீன எல்லை விவகார ஆலோசனை குழு இன்று நடந்தது. இந்தியா சார்பில் கிழக்கு ஆசியாவிற்கான கூடுதல் செயலர் தலைமையிலான குழுவும் சீனா சார்பில் வெளியுறவு அமைச்சகத்திற்கான எல்லைத்துறை இயக்குநர் ஜெனரல் தலைமையிலான குழுவும் இதில் பங்கேற்றனர்.

மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்திய சீனா எல்லையில், மேற்கு பிராந்தியத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நிலவும் சூழ்நிலை குறித்து ஆலோசனை நடந்தது. அக்.,16ம் தேதி இரு நாட்டு பேச்சுவார்த்தைக்கு பிறகு ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து சொல்லப்பட்டது.

கிழக்கு லடாக்கில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் நிலவும் எஞ்சிய பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காண்போம் என இரு தரப்பும் ஒப்பு கொண்டது . இரு தரப்பு ஒப்பந்தங்கள் , நடைமுறைகள் மூலம் ஸ்திரத்தன்மையை விரைவில் ஏற்படுத்த முடியும்.

எல்லைப்பகுதிகளில் எந்த வகையான தவறுகளும் நடக்காமல் தவிர்க்க வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அடுத்த சுற்று பிரச்சனை விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிக்கையில் கூறப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here