இந்த நடிகை ஆடி காரை இவ்வளவு விலை கொடுத்து வாங்கினாரா? – புகைப்படங்களை வெளியிட்ட நிறுவனம்பாலிவுட் நடிகை

0
57
nadikai

மிகவும் விலை உயர்ந்த கார் மற்றும் பைக்குகளை பாலிவுட் திரையுலக பிரபலங்கள் வாங்குவார்கள். கியாரா அத்வானியிடம் பிஎம்டபிள்யூ 530டி, பிஎம்டபிள்யூ எக்ஸ்5 போன்ற பல கார்கள் உள்ளன. தற்போது அவர் வாங்கிய ஆடி ஏ8 எல் காரும் இந்த வரிசையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

புகைப்படங்கள்

கியாரா அத்வானி காருடன் எடுத்த புகைப்படங்களை ஆடி இந்தியா நிறுவனம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

விலை மதிப்பு

1.56 கோடி ருபாய் என்ற விலையில் இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஆடி ஏ8 எல் சொகுசு செடான் காரில் 3 லிட்டர் வி6 இஞ்சின் பொறுத்தப்பட்டுள்ளது.

காரின் வசதிகள்

10Ah லித்தியம் அயான் எலக்ட்ரிக் மோட்டார் இணைக்கப்பட்டுள்ளது. 19 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் உட்புறத்தில் ஏராளமான வசதிகள் உள்ளது. பின்புற பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கால் மசாஜ் முக்கியமான வசதியாக உள்ளது. கழற்றி மாற்றக்கூடிய வகையில் 2 ஆண்ட்ராய்டு டேப்லெட்கள், ஆம்பியண்ட் லைட்டிங், கூல் பாக்ஸ் ஆகிய வசதிகளையும் கொண்டுள்ளது. மேலும் 10.1 இன்ச் டச்ஸ்கிரீன், மேட்ரிக்ஸ் எல்இடி லைட்கள் ஆகிய வசதிகளும் உள்ளது.

பாதுகாப்பு வசதிகள்

ஏ8 எல் காரில் 2 ஆப்ஷனல் சென்ட்ரல் ஏர்பேக்குகள், லேன் அஸிஸ்ட் வார்னிங் சிஸ்டம் போன்ற பல்வேறு பாதுகாப்பு வசதிகளை பெற்றுள்ளது.

இயக்குனர் கரண் ஜோஹர்

இந்தியாவில் இதற்கு முன்பாகவும் நிறைய பிரபலங்கள் இந்த காரை வாங்கியுள்ளதில் இயக்குனர் கரண் ஜோஹர் மிகவும் முக்கியமானவர். இயக்குனர் வாங்கிய அந்த கார் சில்வர் நிறத்தில் இருந்தது. இவரிடம் சொகுசு கார்கள் ஏற்கனவே அதிகம் இருக்கின்றன.

விராட் கோலி

இந்த காரை வாங்கியதில் விராட் கோலி மிகவும் முக்கியமானவர். கியாரா அத்வானிக்கு பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here