Technology Tamil News 2022: இன்று முதல் விற்பனையாகும் சியோமி 11ஐ 5ஜி ஸ்மார்ட்போன்!

0
72
xiomi

அறிமுகம்

சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் 5ஜி , சியோமி 11ஐ 5ஜி ஆகியவை கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இன்று நாட்டில் அவற்றின் முதல் விற்பனை தொடங்கியது. இரண்டு சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு இடையே உள்ள முக்கிய வேறுபாடாக அதன் சார்ஜிங் ஆதரவு மட்டுமே உள்ளது.

அம்சங்கள்

ஸ்மார்ட்போன் இரண்டும் 120ஹெச்இசட் அமோல்ட் டிஸ்பிளேக்கள் மற்றும் மீடியாடெக் டிமென்சிட்டி 920 மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்களை பிளிப்கார்ட், மை ஹோம் ஸ்டோர்ஸ் வழியாக வாங்க முடியும்.

விலை

சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் 5ஜி அடிப்படை ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ26,999 ஆகும். 8ஜிபி +128ஜிபி ஸ்டோரேஜ் விலை ரூ28,999 ஆகும். சியோமி 11ஐ 5ஜி மாடல்கள் விலை ரூ 24,999- 26,999 ஆகும்.

தள்ளுபடி

பிரீபெய்டு ஆர்டர்களில் ரூபாய் 1,500, எஸ்பிஐ பயனர்களுக்கு ரூபாய் 2,000 வரை கேஷ்பேக் தள்ளுபடி கிடைக்கிறது.

கேமரா

இதில் 16 எம்பி செல்பி கேமரா, மீடியாடெக் டிமென்சிட்டி 920, 8ஜிபி ரேம் போன்றவை உள்ளது. இரு மாடலிலும் 108 எம்பி பிரைமரி கேமரா, 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

பேட்டரி

சியோமி 11ஐ மாடலில் 5160மெஹா பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் போன்றவை உள்ளது.சியோமி ஹைப்பர்சார்ஜ் மாடலில் 4,500மெஹா பேட்டரி, 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here