இயக்குனர் சுகுமாரை தத்தெடுக்க சொன்ன ராஷ்மிகா மந்தனா!

0
74
rashmika new image

புஸ்பா திரைப்படம்

தெலுங்கு திரையுலகத்தின் முன்னணி நாயகிகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. புஸ்பா படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்து உள்ளார். படத்தின் வெளியீட்டிற்கு முன் நிகழ்ச்சி ஒன்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆர்ஆர்ஆர் இயக்குனர் ராஜமவுலி சிறப்பு விருந்தினராக கலந்து புஸ்பா குழுவினரை வாழ்த்தி பேசினார்.

ராஷ்மிகா மந்தனா பேசியது

ராஷ்மிகா ஆசை

கீதா கோவிந்தம் படத்தின் இசை வெளியீட்டில் அல்லு அர்ஜுன் கலந்து கொண்டார். அங்கு அவருடன் நடிக்க வேண்டும் என்று என்னுடைய ஆசையை தெரிவித்தேன். புஸ்பா படத்தில் ஸ்ரீ வள்ளி வாய்ப்பை வழங்கிய அல்லு அர்ஜுனுக்கு நன்றி என்றும் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

தத்தெடுக்க விண்ணப்பம்

கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இந்த படத்திற்காக நடித்தால் பெற்றோரை கூட பார்க்கவில்லை. அவர்கள் என்னை மறுத்துவிட்டதால் சுகுமார் சார் என்னை தத்தெடுக்க கேட்டு கொள்வதாக அவர் கூறினார். மேலும் தத்தெடுக்க தேவையான விண்ணப்பத்தை அனுப்புவதாக கூறியுள்ளார்.

ரசிகர்கள்

அல்லு அர்ஜுனுக்காக இந்த படத்தை பார்க்க வந்தால் 10 சதவீதம் அவரையும் பார்க்க வருவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தை ஸ்டார்களுக்காக பார்க்காமல் கதாபாத்திரங்களுக்காக பார்க்க ரசிகர்களை கேட்டு கொண்டுள்ளார். டிசம்பர் 17 ஒரு சிறப்பான டிரீட்டை பார்க்க போவதாக ரசிகர்களிடம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here