இளைஞர்களுக்கு மற்றும் பெண்களுக்கு திருமணம் தாமதமாவது ஏன்?

0
68
thirumanam

திருமணத்திற்கு உரிய மணமகன், மணமகள் தேடு தளங்கள் பிஸியாக இயங்கி வருகின்றன. திருமணத்திற்கு அமைந்த தளங்கள், கோடி கோடியாக கொட்டுகின்றன.
ஆண், பெண் ஜாதகங்களை வைத்து கொண்டு தரகர்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள். தற்போது அனைவரும் வேறு சமூகத்தில் கூட தேட தொடங்கிவிட்டனர். இதனை சமூக மாற்றங்கள் என எடுத்துக்கொள்ளலாம்.

தாமதமாக காரணம்

ஜாதகங்கள்

முதலில் ஜாதகத்தில் ஏற்படும் தோஷங்கள் காரணமாக இருக்கும் என கூறுகிறார்கள். சில பெண்களுக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதால் தாமதம் ஏற்படலாம். தொன்னூறு வருடங்களுக்கு முன் தோஷங்கள் இருந்த அனைவர்க்கும் திருமணம் நடந்தது. கிரகங்களின் தலையின் மேல் பழியை போட்டுவிட்டு ஏமாந்து நிற்கின்றனர். திருமணம் பற்றிய மிக மிக தவறான புரிதல்களில் மனிதர்கள் சிக்கி தவிப்பதை இது காட்டுகிறது.

அடுத்தவர் வாழ்க்கையை பார்த்தல்

அடுத்தவர் வாழ்க்கையை பார்த்து தங்களை புரிந்து கொள்ளாமல் தவித்து கொண்டிருக்கின்றனர் சில பேர். அடுத்தவர்கள் குறை கூறுவதால் சிலர் மனமுடைந்து போகிறார்கள். பதட்டம், எரிச்சல் வயது என பல காரணங்களால் குழந்தை கிடைக்கும் வாய்ப்புகள் குறைகின்றன. குழந்தை கிடைக்காததை நினைத்து சிலர் வாழ்க்கையை கோட்டை விடுகிறார்கள்.

30 வயதுள்ள பெண்

நன்கு படித்த, அழகான, சம்பாதிக்க கூடிய , தூரத்து ஊர்களில் வேலை செய்ய கூடியவனாக தேடுகிறார்கள். இப்படி குணமுள்ள ஒருவர் சிலருக்கு மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் திருமணம் தாமதமாகலாம்.

வயது

பல நிபந்தனைகளை கூறி 26,27 வயதில் துணைகளை தேடுவார்கள். பின் கொஞ்சம் கொஞ்சமாக நிபந்தனைகள் குறைந்து 34,35 வயதில் ஏதாவது ஓன்று என கேட்கும் போது கிடைக்காமல் போய்விடுகிறது.

அரசு வேலை

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் அரசு வேலை பார்ப்பவர்களை திருமணம் செய்து கொள்ள நினைக்கின்றனர். இதனால் சிலருக்கு திருமணம் தாமதமாகி விடுகிறது. அதுமட்டுமல்லாமல் சம்பளம் அதிகம் இருக்கும் நபர்களை விரும்புவதால் திருமணம் தாமதமாகி விடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here