இளைஞர்களை ஈர்க்கும் யமஹாவின் ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர்

0
51
Yamaha Aerox 155 Scooter

சாதாரண ஸ்கூட்டர் போலவே அதனுடைய பெரிய வெர்சன்தான் மேக்சி ஸ்கூட்டர். இந்த ஸ்கூட்டர் சக்தி வாய்ந்த என்ஜின்களுடன் ஸ்பேஸ், ஸ்டோரேஜை கொண்டு வருகின்றன. தற்போது ஸ்கூட்டர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.

செப்டம்பர் மாதம் யமஹா நிறுவனம், ஏரோக்ஸ் 155 என்ற மேக்சி ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது.

ஏரோக்ஸ் 155சிசி ஸ்கூட்டரில் R15 பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்ஜின் தான் இதிலும் பயன்படுத்தப்படுகிறது. இது தான் லிக்விட் கூல்டு எஞ்சினை கொண்டு பயன்படுத்தப்படும் முதல் ஸ்கூட்டர்.இந்த ஸ்கூட்டரை நாட்டின் சக்திவாய்ந்த ஸ்கூட்டர் என அழைப்பர்.

குறிப்பாக இளைஞர்களை தாக்கும் முரட்டுத்தனமான ஸ்டைலில் இந்த ஸ்கூட்டர் வெளிவந்துள்ளது. இந்த ஸ்கூட்டருக்கு ஸ்கூட்டரின் ட்வின் மற்றும் எல்இடி ஹெட்லேம்ப்ஸ் ஒரு தனித்தன்மையை வழங்குகிறது. இந்த ஸ்கூட்டர் தனி லுக் கொண்டு உள்ளது.

ஏரோக்ஸ் 155 மற்ற ஸ்கூட்டர்களை விட பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் பல பொருள்களை ஏற்றி செல்லவும் சிறந்து விளங்குகிறது. இந்தியாவில் பெரிய பூட் ஸ்பேஸை கொண்டது இந்த ஏரோக்ஸ் 155.

இந்த ஸ்கூட்டரின் பெட்ரோல் டேங்க் மூடியானது ஓட்டுபவரின் தொடைகளுக்கு இடையில் அமைந்துள்ளது. இந்த அமைப்பானது பெட்ரோல் நிரப்பும் போது வசதியாக இருக்கும்.

ப்ளூடூத் கனெக்டிவிட்டி இந்த ஸ்கூட்டரில் காணப்படுகிறது.பல அம்சங்கள் இந்த ஸ்கூட்டரில் உள்ளதால் அனைவரையும் இது கவர்கிறது. கிளஸ்டர் கனெக்ட் செய்தவுடன் கால், டெக்ஸ்ட் அலெர்ட் , பேட்டரி போன்றவை காண்பிக்கப்படும். மற்ற ஸ்கூட்டரில் உள்ளவாறு இது சத்தம் போடுவதில்லை. சத்தம் போடாமல் இருக்க மோட்டார் ஜெனெரேட்டர் உதவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here