தண்ணீர் பூமியில் உருவானதை தெளிவுபடுத்திய விஞ்ஞானிகள்!

0
64
sooriyan

நமது மண்டலத்தின் உயிர் கிரகமாக பூமி ஒன்று தான் உள்ளது. எந்த கிரகத்திலும் இல்லாத தண்ணீரை பூமி கொண்டுள்ளதால், உயிர்கள் உருவாக,வாழ சிறந்ததாக இருக்கிறது.

கருத்துக்கள்

பூமியில் தண்ணீர் எப்படி உருவானது என்பதற்கான பலதரப்பட்ட கருத்துக்கள் மூலம் விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தினாலும், அது நிரூபிக்க முடியாமல் இருந்தது. இப்போது விஞ்ஞானிகள் தண்ணீர் உருவானது குறித்து உண்மையை வெளியிட்டுள்ளனர்.

ப்ளூ பிளானட்

ஒட்டுமொத்த கிரகத்திலும் பிரமிக்க வைக்கும் கிரகமாக பூமி இருப்பதால் இதனை “தி ப்ளூ பிளானட்” என்று அழைக்கிறார்கள். பூமியில் நீர் உருவாக சூரியன் முக்கிய காரணம் என தற்போது விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

70 சதவீதம் நீர்

பூமியின் மேற்பரப்பில் சுமார் 70% தண்ணீர் உருவாக சி -வகை சிறுகோள்களின் தாக்குதல் காரணமாக உள்ளது என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. சிறுகோள் குழுவிலிருந்து நீர் வந்திருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

ஹைட்ரஜன் பாதிப்பு

இது மட்டும் காரணமாக இருக்காது என்பதை விஞ்ஞானிகள் உணர்ந்தனர். நீர் டியூட்டீரியத்துடன் இணைக்கப்பட்டிருப்பது ஹைட்ரஜனின் கனமான பதிப்பாகும் என்றும் கூறியுள்ளனர்.

சூரியன்

நீரை உருவாக்குவதில் சூரியன் முக்கிய பங்காற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் மூலம் விஞ்ஞானிகளுக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளது. ஹைட்ரஜன் அயனிகள் சிறுகோளில் ஆக்ஸிஜன் அணுக்களுடன் சேர்ந்து H20 மூலக்கூறை உருவாக்கி உள்ளது என்று குறிப்பிடுகின்றனர்.

ஜப்பானிய விண்வெளி

பூமியின் பரந்த நீர்நிலைகளில் சூரியனின் பங்குக்கான முதல் ஆதாரம் இடோகாவா என்ற சிறுகோள் மாதிரிகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்டது. பூமியில் நீர் உருவாகியது குறித்த ஆராய்ச்சிக்கு முக்கிய பங்கை வழங்கியது தெரியவருகிறது. தண்ணீர் உருவாகியதற்கு சூரியன் முக்கிய காரணமாகும் என்பதை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.

அறிக்கை

பூமியில் தண்ணீருக்குப் பங்களிப்பவர்களில் முக்கிய காரணிகளில் ஒன்றாக சூரியனை உறுதிப்படுத்தியுள்ளனர். சூரியக் காற்றிலிருந்து வரும் ஹைட்ரஜனும் , டியூட்டீரியமும் இணைந்து பூமியில் நீரை உருவாக்க காரணமாக உள்ளது என அறிக்கை தெரிவிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here