உப்பின் வரலாறு! மறைக்கப்பட்ட சுவர்!

0
67
uppu

உலகம் முழுவதும் நிறைந்திருக்கும் உப்பு உயிரோட்டத்திற்கான சாவி. அனைத்து உயிர்களும் ஆற்றலுடன் செயல்பட இந்த உப்பு அவசியம். உணவில் சுவைக்காக மட்டும் சேர்க்கும் பொருளாக இதை அனைவரும் நினைக்கின்றனர்.

உடல் இயக்கம்

நமது உடல் இயக்கத்துக்கு அடிப்படையான ஓன்று இதுவாகும். நமது உடலின் எலும்புகளும், தசைகளும் சரியாக இயங்க வேண்டும் என்றால் உப்பு அவசியமான ஒன்றாகும்.

நன்மை

சோடியம், குளோரைடு சேர்த்தது தான் உப்பு. சோடியம் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க அடிப்படையான ஆதாரமாகும். நமது ரத்தத்தின் பிஹெச் அளவையும், ரத்த அழுத்தத்தையும் சரியாக வைக்க தேவையானவை. உப்பை நாம் வேலை செய்யும் போது வியர்வை மூலமாக வெளியேற்றுகிறது.

விலங்குகள்

மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் காட்டு விலங்குகளுக்கும் உப்பு அவசியமானதாகும். மான், எருமை போன்ற விலங்குகள் தனக்கு தேவையான உப்பை தாவரங்களிலிருந்து எடுத்துக்கொள்கிறது. கென்யாவில் இருக்கும் எல்கன் மலையில் உள்ள உப்பு சுரங்கத்தை யானைகள் தோண்டியுள்ளன. உப்பு தேவைப்படும் போது அங்கு சென்று தந்தத்தால் பாறைகளை உடைத்து உப்பை சாப்பிடுகின்றன.

உப்பு தேவை

விவசாயம் செய்ய ஆரம்பித்த போது உப்பு மனிதர்களுக்கு தேவை பட்டது. அந்த உப்பினை எப்படி உற்பத்தி செய்வது என்பதை அவன் யோசிக்க ஆரம்பித்தான்.பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் குளக்கரையிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டது என்பது புத்தகத்தில் எழுதிவைக்கப்பட்டது. உப்புக்கு ஈடாக பல விலை உயர்ந்த பொருள்கள் வாங்கப்பட்டது.

எகிப்து

எகிப்தியர்கள் தங்களது நாட்டின் எல்லையில் உள்ள உப்பை விற்று செல்வசெழிப்பாக இருந்தார்கள். இவர்கள் பிரமிடுகளில் அதனை வரைந்து வைத்துள்ளனர். அரசர்களின் உருவம் பதித்த காயின்கள் இருந்துள்ளது என மார்கோ போலோ தெரிவித்துள்ளார்.

நெய்தல்

“நெல்லும் உப்பும் நேரே ஊரிர்
நெல்லின் நேரே வெண்கல் உப்பு” என்ற சங்ககால பாடல்கள் உப்பின் பெருமையை விளக்குகிறது. நெய்தல் நில மக்கள் உப்பை விளைவித்தனர். உப்பு வியாபாரிகளை உமணர்கள் என சங்க கால பாடல்கள் சொல்கிறது.

மதங்கள்

இந்து மதத்தில் உப்பை லட்சுமியாக பார்க்கிறார்கள். குறிப்பிட்ட நாட்களில் உப்பு விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர் இந்துக்கள். யூதர்கள் உப்பை இறைவனுடைய உடன்படிக்கையாக பார்த்தனர். கிறிஸ்தவர்கள் உப்பை புனிதமாக பார்க்கிறார்கள்.

காந்தி

உப்பு வரியை எதிர்த்து அதனை மிகப்பெரிய ஆயுதமாக கையில் எடுத்தவர் காந்தி. குஜராத்திலிருந்து நடந்து வந்து 1930 ஏப்ரல் 6 அன்று தண்டியில் உப்புக்களை எடுத்துள்ளார் காந்தி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here