உலகமே பயன்படுத்தும் டாப் 7 விஷயங்களை கண்டுபிடித்தவர்கள் இந்தியர்களா!

0
65

நமது நாடு

உலகின் பழமையான நாகரீகங்களில் ஒன்றான நமது நாடு வளமான வரலாறு, கலாச்சாரம், உறுதியான அறிவியல் போன்றவற்றை கொண்டுள்ளது. இந்தியர்கள் கண்டுபிடித்தது எவை என தெரியாமல் வேறு யாரையோ நினைத்து கொண்டிருக்கிறோம்.

பட்டன்கள்

சிந்து சமவெளி நாகரீகமான மொகஞ்சதாரோவில் பட்டன்கள் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது. கிமு 2000 முதல் கிமு 5,000 ஆண்டுகளுக்கு முன்பு அலங்கார நோக்கத்துடன் கண்டறியபட்டது. முதல் பட்டன்கள் குண்டுகளால் நடுவில் இரண்டு துளைகள் இட்டு செய்யப்பட்டன.

சதுரங்கம்

இது அரபு வம்சாவளியை சேர்ந்த விளையாட்டு என்று அனைவரும் கருதுகின்றனர். இந்த விளையாட்டை இந்தியர்கள் உருவாக்கியுள்ளனர். இது காலாட்படை , யானைப்படை, குதிரைப்படை, தேர் என நன்கு பிரிவுகள் கொண்டதாக உள்ளது. 6ம் நூற்றாண்டின் குப்தா பேரரசின் நவீன பரிணாம வளர்ச்சியடைந்த துண்டுகளால் குறிப்பிடப்படுகிறது. இதனை அஷ்டபதா என்ற இன்னொரு பெயருடன் அழைக்கப்படுகிறது.

யுஎஸ்பி

அஜய் வி. பட் என்பவர் தான் இன்று நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் யுஎஸ்பி சாதனத்தை உருவாக்கியுள்ளார். இது அதிக அளவு சேமிப்பு மற்றும் தரவு பரிமாற்றத்தை வைத்திருக்கவும் எடுத்து செல்லவும் பயன்படுத்தும் ஒன்றாகும். யுஎஸ்பி போர்ட் ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.

மை

எழுதுவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட மை இந்தியர்களால் தான் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. இந்த நுட்பம் தென்னிந்தியாவில் கிமு 4ம் நூற்றாண்டில் பரவலாக பயன்படுத்தப்பட்டது.

பருத்தி

இந்தியர்கள் பருத்தியை கிமு 4 ஆம் மில்லினியத்தில் சிந்து சமவெளி நாகரீகத்தில் பயிரிட தொடங்கப்பட்டது. முதலில் பஞ்சினை கண்டுபிடித்ததும் இந்தியர்கள் ஆவர்.

சுரங்கங்கள்

18 ஆம் நூற்றாண்டு , 5000 ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய இந்தியா மட்டுமே உலகிலேயே வைரங்கள் கண்டறியப்பட்ட முக்கிய ஆதாரமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை முதலில் கண்டுபிடித்ததும் இந்திய மக்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்புரை அறுவை சிகிச்சை

இந்திய மருத்துவர் சுஷ்ருதா கண்புரை அறுவை சிகிச்சை மூலம் முதன் முதலில் கண்புரைக்கான தீர்வை கண்டறிந்தார். இதன் புகழ் மிகவும் பரந்ததால், சீன விஞ்ஞானிகள் மட்டுமல்லாமல், கிரேக்கர்களும் இந்தியாவுக்குச் சென்று அறுவை சிகிச்சைக்கான நுட்பங்களைப் பற்றி அறிந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here