உலகம் முழுவதும் வண்ண விளக்குகளால் கவர்ந்த 2022 புத்தாண்டு!

0
68
vilakukal

விளக்குகள்

உலகின் கிழக்கு பகுதியில் உள்ள நாடுகளில் ஒன்றான நியூசிலாந்தில் நேற்று மாலை 4.30 மணிக்கு 2022 ஆம் ஆண்டு பிறந்துள்ளது. ஆக்லாந்தின் ஸ்கை டவர், துறைமுக பாலம் போன்ற பகுதிகள் வண்ண லேசர் விளக்குகளால் ஜொலித்தன.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலும் புத்தாண்டை மக்கள் வண்ண விளக்குகளால் வரவேற்றனர். கண்கவர் வாணவேடிக்கைகள் அங்கு நள்ளிரவை வண்ணமயமாக ஜொலித்தது. ஆஸ்திரேலியாவில் வண்ணங்களில் வெடிக்கப்பட்ட பட்டாசுகள் காண்போர் மனதை கொள்ளை கொண்டது.

தைப்பே

இங்கு உள்ள 101 மாடி கட்டடத்தின் மீது வர்ண ஜாலங்களுடன் வாணவேடிக்கை நடைபெற்ற போதிலும் கட்டுப்பாடுகள் காணப்பட்டன.

பியாங்க்யாங்கில்

புத்தாண்டு நிகழ்ச்சியில் வேறு நாட்டில் இருந்து வந்த பள்ளிக்குழந்தைகள் நடனமாடினர். கண்களை கொள்ளை கொள்ளும் வகையில் பட்டாசுகளை வெடித்து, பொதுமக்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

தென்னாப்பிரிக்கா

இந்த நாட்டில் ஓமைக்ரான் படிப்படியாக குறைந்து வருவதால் அங்கு கட்டுப்பாடுகளை அரசு குறைத்தது. இதனால் அங்குள்ள மக்கள் அனைவரும் உற்சாகமாக புத்தாண்டை கொண்டாடினர்.

விண்வெளி நிலையம்

ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், மியான்மர் நாடுகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் உற்சாகமாக நடைபெற்றது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் வீரர்கள் விருந்து உண்டு அவர்களது புத்தாண்டை கொண்டாடினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here