ஊட்டியில் உறைபனி காலத்தால் மக்கள் வாட்டம்!

0
64
ooti

ஊட்டி

ஊட்டியில் தற்போது உறைபனி காலம் தொடங்கியது. காலை, மாலை நேரத்தில் அங்கு வசிக்கும் மக்கள் கடும் குளிரால் அவதியடைந்துள்ளனர்.

உறைபனி

நீலகிரி மாவட்டத்தில் அனைத்து ஆண்டிலும் நவம்பர் மாதம் இறுதியில் உறைபனி தாக்கம் தென்படும். தற்போது நடைபெறும் ஆண்டில் டிசம்பர் முதல் வாரம் வரை பரவலான மழை பெய்ததால் உறைபனி தாமதம் ஆனது.

உறைபனி தென்பட்ட சில இடங்கள்

நேற்றைய தினம் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரேஸ்கோர்ஸ் மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் உறைபனி தென்பட்டுள்ளது.

நிலவரம்

நேற்றைய தினம் நிலவரப்படி, அதிகபட்ச வெப்பநிலை 17.3 டிகிரி ஆக இருந்தது. குறைந்தபட்சமாக 4 டிகிரி அங்கு பதிவாகி உள்ளது. கடும் குளிர் காலை, மாலை நேரங்களில் நிலவுவதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here