ஊரடங்கு மீறி வெளியே வந்த 547 வாகனங்கள் பறிமுதல்!

0
64
ஊரடங்கு

தகவல்

சென்னையில் இரவு ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 547 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 501 இருசக்கர வாகனங்கள், 32 ஆட்டோக்கள், 14 இலகுரக வாகனங்கள் பறிமுதல் செய்ததாக சென்னை காவல் துறை அறிவித்துள்ளது.

ஊரடங்கு

தமிழகத்தில் நேற்று இரவு முதல் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வெளியே வர வேண்டாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பெட்ரோல் பேங்குகள், பத்திரிகை, பால் விநியோகம் போன்ற பொருள்களை எடுத்து செல்லும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.

தடை

பொதுமக்கள் தேவையின்றி வெளியே வந்தால் நடவடிக்கை எடுப்பதோடு வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்ல தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

முகக்கவசம்

பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் வெளியே வரக்கூடாது என தமிழக அரசு அறிவுறித்தியதோடு வெளியே வருபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here