ஊழியர்கள் வன்முறை; நான்கு காவல் துறை அதிகாரிகள் படுங்காயம் ‘100 பேர் கைது !!!

0
78
police

கேர­ளா­வில் உள்ள உள்­ளூர் மக்­க­ளு­க்­கும் வெளிமாநிலத்தில் உள்ள ஊழி­யர்­க­ளுக்­கும் இடையே ஏற்­பட்ட சண்டையால் நான்கு காவல்­துறை அதி­கா­ரி­கள் காயம் அடைந்துள்ளன, காவல்­துறை வாக­னம் தீப்பற்றி எரிந்தது.

தொழிலாளிகள்

கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சி அருகே கிழக்­கம்­ப­லம் பகு­தி­யில் நாகாலாந்து மணிப்­பூர் மாநி­லங்­களைச் சேர்ந்த 3,000க்கும் மேற்­பட்ட தொழி­லா­ளி­கள் தங்கி இருக்கின்றனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகை

சனிக்­கி­ழமை இரவு கிறிஸ்­மஸ் பண்­டி­கையை உற்­சா­க­மாகக் கொண்­டா­டி­னர். அவர்­களில் சிலர் மது அருந்தி போதை­யில் கத்தி கொண்­டி­ருந்­த­னர். அதனால் கோப­ம­டைந்த மக்­கள் அவர்­க­ளைக் கடுமையாக தீட்டினர். இதன் பிறகு இரு தரப்­பி­ன­ருக்­கும் இடையே பேச்சுவார்த்தை ஏற்­பட்­டது. பின்­னர் சண்டை தொடங்கியது.

குன்னத்தூர் காவல் துறைக்கு தகவல்

கூட்­டத்­தில் இருந்த பலர் கற்­களை வீசித் தாக்­கி­ய­தா­க­வும் சம்பவத்தை மொபைலில் பதிவு செய்தவர்களை அடித்து உதைக்­கப்­பட்­ட­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது. இத­னால் பயம் அதி­க­ரித்­தது. ­ப­குதியில் உள்ள மக்­கள் காவல்­து­றைக்குத் தக­வல் கொடுத்­த­னர்.

தொழிலாளர்கள் காவல்துறையினரை தாக்குதல்

அங்கு வந்த ஆய்­வா­ளர் உதவி ஆய்­வா­ளர் இரண்டு காவல்­துறை அதி­கா­ரி­கள் சண்டையில் ஈடுபட்டுள்ளவர்களை செல்­லு­மாறு எச்­ச­ரித்­த­னர். ஆனால் காவல்­து­றை­யின் எச்­ச­ரிக்­கை­யை­ மீறி தொழி­லா­ளர்­கள் காவல்­து­றை­யி­ன­ரை­யும் கடுமையாக தாக்­கி­னர். அவர்­கள் வந்த வாகனத்திற்கு தீ வைத்தனர். அந்த வழி­யாக வந்த வாகனங்களை அடித்து சேதம் படுத்தினர். இதனால் 4 பேருக்கு படு­கா­யம் அடைந்­த­னர். அவர்­களை மீட்டு மக்கள் மருத்து­வ­ம­னை­யில் சேர்த்­த­னர்.

அதிரடி படை

இதன் பிறகு காவல்­துறை உயர் அதி­கா­ரி­க­ளுக்கு சம்பவம் குறித்து தக­வல் தெரிவிக்கப்பட்டது. உயர் அதி­காரி தலை­மை­யில் 500க்கும் மேற்­பட்ட அதி­ரடிப் படை­யி­னரை அங்கு அனுப்பினர். சண்டையில் ஈடுபட்டுள்ளவர்களை தடி­யடி நடத்தி காவல்­து­றை­யி­னர் விரட்டினர்.

100 பேர் கைது

காவல்­துறை அதி­கா­ரி­க­ளை தாக்­கி­யதற்கும் வாக­னங்­க­ளுக்­குத் தீ வைத்ததற்கும் 100 பேரை கைது செய்­துள்­ள­னர். பிற மாநிலத்தில் உள்ள தொழி­லா­ளர்­க­ளின் இந்த செயலால் அப்­ப­குதி மக்­கள் அதிர்ச்­சி­ய­டைந்து­ உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here