எகிப்தில் பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு நியூசெர்ரா என்ற இடத்தில் 2 ஆவது சூரிய கோவில் கண்டுபிடிக்கபட்டுள்ளது.

0
65
sun temple in egypt

பழமையான நாகரீகம் என்பது எகிப்திய நாகரீகம்.பல வருட ஆராய்ச்சிக்கு பிறகு சூரிய கோவிலை எகிப்தில் கண்டுபிடித்துள்ளனர்.

பார்வோன் நியூசெர் என்ற எகிப்திய மன்னனால் சூரிய கோவில்கள் கட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இதனால் இவற்றை பாரா சூரிய கோவில்கள் என்கிறார்கள்.இதுவரை 2 சூரியகோவில்களை கண்டு பிடித்து இருந்தனர். மூன்றாவது சூரிய கோவிலையும் கண்டுபிடித்துள்ளனர்.கிட்டத்தட்ட 6 சூரிய கோவில்கள் இருப்பதாக ஆய்வுகளில் தெரிகிறது.

4500 ஆண்டு பழமை வாய்ந்த இந்த கோவில் கி.மு 25 ஆம் நூற்றாண்டில் பார்வோன் நியூசெர் என்ற மன்னரால் கட்டப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யும் போது சில வேறு தடயங்கள் கிடைக்கலாம் என கருதுகின்றனர்.

இந்த கோவிலில் பெரிய நுழைவாயில் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எகிப்திய அகழ்வாராய்ச்சி பற்றிய துறையில் துணை பேராசிரியரான டாக்டர். மாசிமிலியானோ நஸோலோ இந்த கோவில் கிடைத்த இடத்தில் வேறுஒரு கோவில் இருக்கலாம் என கருத்து தெரிவித்தார்.

sun temple

ஆராய்ச்சியாளர்கள் அகழ்வாராய்ச்சி செய்த இடத்தில் மண்பாண்டங்கள் மற்றும் ஜாடிகள் கிடைத்ததாக நஸோலோ கூறுகிறார்.

முதலில் அங்கு சின்ன செங்கற்களை பார்த்து அகழ்வாராய்ச்சி செய்ய தொடங்கி பின்னர் சூரிய கோவிலை கண்டறிந்தனர்.இந்த கோவில் 1898ம் ஆண்டு நியூசெரா என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்த இரண்டாவது கோவிலை விட மூன்றாவது கோவில் மிக பெரிய வேறுபாடுடன் உள்ளதாக கூறுகின்றனர். வேறு கோவில்களும் வெவ்வேறு அமைப்புடன் காணப்படும் என நஸோலோ கூறுகிறார்.

தற்போதைய அகழ்வாராய்ச்சி பெரிய அளவில் வளர்ந்துள்ளது.இதனால் பல்வேறு எகிப்திய அகழ்வாராய்ச்சிகள் நடக்கலாம் என ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here