எலக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்க புதிய கொள்கை

0
60
electric car

கோவா

எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக புதிய திட்டத்தை கோவா அரசு அறிவித்துள்ளது. 2025 ம் ஆண்டிற்குள் 30 சதவீதம் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற அரசு இலக்கினை நிர்ணயம் செய்துள்ளது.

வேலை வாய்ப்புகள்

2025ம் ஆண்டிற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நகர பகுதிகளில் ஒவ்வொரு 3 கிலோ மீட்டருக்கும், நெடுஞ்சாலைகளில் 25 கிலோ மீட்டருக்கும் வாகனங்களுக்கு சார்ஜிங் ஸ்டேஷன்களையும் அமைக்க உள்ளது.

மானியம்

சார்ஜிங் ஸ்டேஷன்களுக்கு 20 சதவீதம் – 50 சதவீதம் வரை மின்சாரத்திற்கு மூலதன மானியம் கோவா மாநிலத்தில் வழங்கப்பட உள்ளது. பெரிய திட்டங்களுக்கு 20% சிறிய திட்டங்களுக்கு 30% ஸ்டார்ட்அப் 50% மானியம் கொடுக்கப்படவுள்ளது.

உள்கட்டமைப்பு வசதிகள்

எலக்ட்ரிக் வாகனங்கள் மூலம் கோவா மாநிலத்தை சர்வதேச தரத்திற்கு மாற்றவும், ஒரு முன் மாதிரி மாநிலமாகவும் நிறுவ இந்த கொள்கையின் மூலம் திட்டமிடப்பட்டுள்ளது. மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதை ஊக்குவிக்கும் விதமாக சார்ஜிங் ஸ்டேஷன் வசதிகளையும் மேம்படுத்த உள்ளது.

கொள்கை

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க ஒவ்வொரு மாநில அரசுகளும் இந்த கொள்கையை அறிவித்து வருகின்றன. எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியம் வழங்கப்படுவதுடன், இதனை ஊக்குவிப்பதற்காக திட்டங்களும் முக்கியத்துவம் கொடுக்கிறது.

அதிக முக்கியத்துவம்

எலக்ட்ரிக் வாகனங்களை அதிகரிப்பதன் மூலம் காற்று மாசுபாடு பிரச்சனைக்கும், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்கும் திட்டமிட்டுள்ளது. இந்த காரணமாக இந்தியாவில் தற்போது எலக்ட்ரிக் வாகனங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

மக்கள் விருப்பம்

பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருப்பதால் மக்களும் இந்த வாகனங்களை அதிகம் விரும்புகின்றனர். இந்த வாகனங்கள் மட்டுமல்லாது சிஎன்ஜி மாற்று எரிபொருள்களில் இயங்கும் வாகனங்களும் தற்போது அதிகரித்து வருகிறது. சாலை போக்குவரத்து அமைச்சர் மிகவும் இந்த வாகனங்களை இயக்க ஆதரவாக உள்ளார்.

சாலை போக்குவரத்துக்கு துறை அமைச்சர்

அவர் தற்போது ஹைட்ரஜனில் இயங்க கூடிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த காரில் வலம்வரப்போவதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here