Latest Crime News2022: எஸ்பிஐ பயனர்கள் இந்த தவறை செய்யாதீர்கள்!

0
52
sbi

சமீபத்தில் எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர் ஒருவர் வங்கியின் சேவை என்னை அறிந்து கொள்ள கூகிள் சர்ச் சேவையை பயன்படுத்தி வங்கி கணக்கில் இருந்த 4.02 லட்சம் ரூபாயை இழந்துள்ளார்.

அவசர உதவி

மும்பையில் வசிக்கும் 73 வயது முதியவர் சமீபத்தில் கூகிள் சர்ச் சேவையை பயன்படுத்தி சேவை மைய எண்களை தேடி உள்ளார். அதில் கிடைத்த போலி என்னை அழைத்ததால் மோசடி செய்பவர் வலையில் சிக்கி பல லட்சத்தை இழந்துள்ளார். அவர் டெபிட் கார்டை செயல்படுத்த முயன்ற போது மோசடியில் சிக்கி பணத்தை இழந்துள்ளது தெரியவந்துள்ளது.

Capture cleanup11

புகார்

ஜனவரி 10ம் தேதி காவல் நிலையத்தில் முதியவர் மோசடி குறித்து புகார் அளித்துள்ளார். டிசம்பர் 25 அன்று டெபிட் கார்டு ஆக்ட்டிவேட் செய்வதற்காக சேவை என்னை கூகிளில் தேட முயன்ற போது எஸ்பிஐ டெபிட் கார்டு உதவி எண் என்ற பக்கத்திற்கு அழைத்து செல்லப்பட்டேன் என அவர் கூறியிருந்தார்.

போலி அதிகாரி

அவர் மொபைல் எண்ணில் இருந்து அழைத்த பிறகு பேசியவர் எஸ்பிஐயில் பணிபுரியும் நபர் என்று ஒருவர் பேசியுள்ளார் என முதியவர் புகாரில் குறிப்பிட்டிருந்தார். போலி அதிகாரி எனிடெஸ்க் ஆப்ஷனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யுமாறு அழைப்பில் முதியவருக்கு கூறியுள்ளார்.

Capture cleanup16

திருட்டு

எனிடெஸ்க் ஆப்ஸ் பற்றி அறியாத முதியவர் அதனை தனது மொபைலில் நிறுவியதும் மோசடி செய்பவர் அந்த முதியவரின் விவரங்களை பயன்படுத்தி பல பரிவர்த்தனைகள் மூலம் 4 லட்சம் ரூபாயை வேறு வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்துள்ளார். எல்லாம் முடிந்த பின் சர்வர் மெதுவாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

வங்கி

போலி அதிகாரி முதியவரை டெபிட் கார்டு ஆக்ட்டிவேட் செய்யப்படவில்லை என கூறி வங்கிக்கு நேரில் சென்று சில செயல்முறையை முடிக்குமாறு அவர் கூறியுள்ளார்.

அதிர்ச்சி

முதியவர் வங்கிக்கு சென்றபோது அவரது கணக்கில் இருந்த தொகை திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

Capture cleanup14

வங்கியின் டோல்ஃப்ரீ எண்

எஸ்பிஐ அறிவித்த புதிய இலவச டோல்ஃப்ரீ எண் 1800 1234 ஆகும். இனி கூகிளில் சேவை மைய எண்களை தேடாமல் வங்கியின் அதிகாரப்பூர்வ எண் மூலம் தொடர்பு கொள்ளுங்கள். இந்த எண்கள் வாடிக்கையாளர்கள் எளிதாக ஞாபகம் வைத்து கொள்ளும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here