ஏடிஎம் மிஷினில் பணம் கொள்ளையடிக்க முயற்சி செய்த வாலிபர் கைது!

0
70
atm

அரசு வங்கி

மதுரை காமராஜர் சாலை குருவிக்காரன் சந்திப்பு அருகில் அரசு வங்கி ஏடிஎம் உள்ளது. நேற்று அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் லாக்கரை உடைத்து, உள்ளே இருந்த பணத்தை திருட முயன்றுள்ளார்.

தகவல்

எச்சரிக்கை மணி ஒலித்ததால் தலைமை அலுவலகத்தில் இருந்து காவல் கட்டுப்பாடு அறைக்கு தகவல் தரப்பட்டது. உடனடியாக போலீசாரும் அந்த இடத்தில் வந்து சோதனையை மேற்கொண்டனர்.

பதுங்கல்

அங்கு போலீசார் பார்த்த போது ஏடிஎம் மிஷின் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. போலீசார் தேடி சென்றபோது தெப்பக்குளம் அருகே பதுங்கியிருந்த யாசின் அலி என்ற கொள்ளையனை கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here