ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அவலம்;பக்தர்கள் கொரோனாவால் அவதி

0
75

ஏழுமலையான்

திருமலை ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கொரோனா தடுப்பு காரணமாக இரண்டு ஆண்டுகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்பொழுது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் பக்தர்களை கோவிலில் அனுமதிக்க பட்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

பக்தர்கள்

முடிகாணிக்கை செலுத்தின பக்தர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 168. ஏழுமலையானை நேற்றைய தினம் தரிசித்த பக்தர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 315. தரிசன டிக்கெட்டுகளின் முன்பதிவு செய்து சர்வ தரிசன டிக்கெட்டுககளையும் ஆன்லைன் மூலம் வெளியீட்டு வருகிறார்கள்.

கொரோனா தடுப்பூசி

ஏழுமலையானை தரிசிக்க அனுமதி உள்ள பக்தர்கள் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் எடுத்து கொண்டதற்க்கான சான்றிதழ் அல்லது கோவிட் பரிசோதனை நெகடிவ் சான்றிதழ் ஆகியவற்றை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.

பக்தர்களின் வருகை அதிகரிப்பு

ஏழுமலையானுக்கு இரவு 11.30 மணி அளவில் ஏகாந்த சேவை நடத்தி,12.00 மணிக்கு கோவில் நடை மூடப்படுகிறது. தரிசனம் அனுமதி உள்ள பக்தர்கள் காலை 6:௦௦ மணிக்கு ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாக,24 மணிநேரமும் நடைபாதையாக நடந்து திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருமலை கோவிலின் நடைபாதை காலை 3:௦௦ மணிக்கு திறக்கப்பட்டு இரவு 12:௦௦ மணிக்கு மூடப்படுகிறது.

விதிமுறைகள்

திருமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் முக கவசம், சைனிடைசர் ஆகியவற்றை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். 10 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்கள், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே தரிசனைக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

கனமழை

கனமழையின் காரணமாக திருமலைக்கு வரஇயலாத பக்தர்களுக்கு தேவஸ்தானம்ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளன. மழையின் காரணத்தால் திருமலைக்கு வரமுடியாத பக்தர்கள் சாப்ட்வேரில் அதே டிக்கெட்டை பயன்படுத்தி முன்பதிவு செய்து ஆறு மாத காலத்திற்குள் ஏழுமலையானை தரிசனம் செய்து கொள்ளலாம்.

புகார்

வாடகை அறை பற்றி புகார் அளிக்கும் பக்தர்கள் 1800 425 4141, 9399 399 399 என்ற தொலைபேசி எண்னை தொடர்பு கொள்ள வேண்டும். கருடசேவையை திருமலை தேவஸ்தானம் மாதந்தோறும் நடத்தி வருகின்றனர்.

பெளர்ணமி

கருடசேவையை காண முடியாத பக்தர்கள் பெளர்ணமி அன்று நடக்கும் கருடசேவையில் கலந்து கொள்ளலாம். ஏழுமலையானின் உற்சவமூர்த்தியான மலையப்ப சுவாமி கருட வாகனத்தில், எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் அளித்தார். இதில், திருமலை ஜீயர்கள், தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோரும், தாராளமான பக்தர்களும் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here