ஒரு லட்சம் ரூபாய்க்கு ரூ.14 லட்சத்தை கொடுத்து ஏமாற்றம்!

0
74
cyber

செலவு

மகாராஷ்டிரா மாநிலம் தானேவைச் சேர்ந்தவர் ரூ. 18 லட்சம் ஓய்வூதிய பணத்தை வங்கி கணக்கில் வைத்துள்ளார். அவருக்கு தெரியாமல் மகள் அதிலிருந்து ஒரு லட்சம் ரூபாயை செலவு செய்துள்ளார்.

நிதி நிறுவன முகவர்

அந்த தொகையை ஈடுகட்ட கடன் வாங்க முடிவு செய்துள்ளார். இது குறித்து இணையத்தில் விசாரித்துள்ளார். ஜூலை மாதம் நிதி நிறுவன முகவர் என கூறி அவரிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். இந்த கடனை வழங்க ரூபாய் 2,600 அனுப்ப கேட்டுள்ளனர்.

கடன்

அனைத்து விவரங்களையும் சமர்ப்பித்த பின்னர் அவருக்கு கடன் எதுவும் வழங்கவில்லை.நிதி நிறுவனத்தை அணுகிய போது முகவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதனை பார்த்துக்கொள்ள வந்த மற்றொருவர் பல கட்டணங்களை வசூலித்துள்ளார். அந்த பணம் அனைத்தும் திரும்ப தரப்படும் எனவும் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளனர்.

ஏமாற்றம்

ஜூலை முதல் செப்டம்பர் வரை அவர் ஒரு லட்சம் கடனுக்காக ரூ.14 லட்சம் செலவளித்துள்ளார். ஏமாற்றம் அடைந்ததை உணர்ந்த அந்த அறிவாளி பெண் போலீசை அணுகியுள்ளார். அவரிடம் மோசடி செய்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here