ஒரு வளாகத்தில் பல மின் இணைப்புகள் கொடுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை!

0
72

அதிகாரிகள்

ஒரே வளாகத்தில் ஒரு பெயரில் பல இணைப்புகளை வழங்கியிருந்தால் அதில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மின் உற்பத்தி

ஒரு வளாகத்தில் பல இணைப்புகள் சட்டவிரோதமாக வழங்குவது பலமுறை அறிவுறுத்தியும் தொடர்ந்து கொண்டே இருப்பதாக தெரியவருகிறது. ஒரு வளாகத்தில் ஒரு பெயரின் கீழ் தாழ்வழுத்த மின் இணைப்புகள் குறித்து ஆய்வுகளை நடத்துமாறு தலைமை பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எச்சரிக்கை

இணைப்பை உயரழுத்த இணைப்பாக மாற்றாமல் உள்ள நுகர்வோருக்கு 3 மாதம் அவகாசம் வழங்கி நோட்டீஸ் அனுப்பவேண்டும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதிகாரிகள் தவறு செய்திருந்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தனி இணைப்பு

குடியிருப்புகளில் எத்தனை இணைப்புகள் கொடுக்கப்பட்டது என கணக்கெடுக்கவும், குடிநீர் விநியோகம், குளிர்சாதன பெட்டி, தடையற்ற மின் விநியோகம் செய்யும் கருவி போன்றவற்றிற்கு வளாகத்துக்குள் தனி இணைப்பு வழங்க கூடாது என தெரிவித்துள்ளது. இதனால் ஏற்படும் வருவாய் இழப்பை தடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்சார ஒழுங்குமுறை

ஆய்வுகளை மேற்கொண்ட போது பல்வேறு இடங்களில் மின்சார ஒழுங்குமுறை விதிகளை மீறி இணைப்பு வழங்கப்பட்டது. அங்குள்ள குடியிருப்புகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று பொறியாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here