ஓமைக்ரான் காரணமாக சிங்கப்பூருக்கு செல்வதில் சிக்கல்!

0
45
vimaanam

விமான நிலையம்

கோவை விமானநிலையத்தில் இருந்து சார்ஜா, சிங்கப்பூர் விமான சேவை வழங்கப்பட்டு வந்தது. கொரோனா தொற்றால் இரண்டு ஆண்டுகளாக போக்குவரத்தில் சில தடைகள் இருந்து வருகிறது.

விமான சேவை

கோவை – சார்ஜா செல்லும் விமான சேவை மட்டும் அனைத்து நாட்களும் வழங்கப்படுகிறது.கோவை – சிங்கப்பூர் செல்லும் விமானம், இலங்கை செல்லும் விமானம் போன்றவை துவங்காமல் உள்ளன.

அறிவிப்பு

பிளை ஸ்கூட் நிறுவனம் வரும் 28ம் தேதி கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு விமான சேவை துவங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஓமைக்ரான் காரணமாக மீண்டும் விமான சேவை துவங்க சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அதிகாரிகள் கூற்று

விமான சேவை குறித்து தகவல்கள் வெளியாகவில்லை என்றும்,ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள். மேலும், ஓமைக்ரான் காரணமாக விமான சேவை குறித்து சந்தேகம் உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here