கடன் பணத்திற்காக விவசாயியை திட்டிய பெண் ஊழியர்!

0
70
vivasaayi

விவசாயி

விழுப்புரம் மாவட்டம் ஏனாதிமங்கலம் கிராமத்தை சேர்ந்த ரகோத்தம்மன் விவசாயி ஆவார். இவர் இந்திய விவசாய முன்னேற்ற சங்கத்தின் தலைவர் ஆவார். இவர் தேசிய வங்கியில் 30 ஆயிரம் ரூபாய் விவசாய கடன் வாங்கியுள்ளார். இதனை வசூலிக்க பெண் ஊழியர் ஒருவர் மொபைல் போனில் விவசாயியிடம் பேசியுள்ளார்.

உரையாடல்

பெண் ஊழியர் : ரிலையன்ஸ் ஏஆர்சி யில் இருந்து பேசுறேன் நீங்க பேங்க்ல லோன் எடுத்து இருக்கீங்களா?

விவசாயி : லோன் எடுத்து இருக்கேன் உங்களுக்கு என்ன?

ஊழியர் : பேங்க்ல ரிலையன்ஸ்க்கு பார்வர்டு பண்ணிட்டாங்க என்று சொல்லலையா.

விவசாயி : பேங்க்ல கடன் வாங்குனா எப்படி ரிலையன்சுக்கு பார்வர்டு பண்ணுவாங்க.

ஊழியர் : நீங்க வருஷக்கணக்கா கட்டாம இருப்பீங்க நாங்க கேட்குறதுக்கு பதில் சொல்லியாகணும்.

விவசாயி : உங்ககிட்ட வாங்குனா தானே உங்களுக்கு பதில் சொல்லணும்.

ஊழியர் : நீங்க கிளம்பி வாங்க முதல ரூல்ஸை எல்லாம் பேங்க்ல வந்து பேசுங்க.

விவசாயி : நீ ஏன் எனக்கு போன் பன்ற நீ வைமா போன.

ஊழியர் : யோவ் நான்தான் கால் பண்ணனும் இந்த லா எல்லாம் பேசிட்டு இருக்காத.

விவசாயி : கலெக்டர்கிட்ட பேசிட்டு வாறேன்

ஊழியர் : கலெக்டர்கிட்ட போறியா என் பேரு அஸ்வினி போய் சொல்லு.

விவசாயி : உங்க கிட்ட கடன் வாங்குனா எங்கள சாவ சொல்றீங்களா?

ஊழியர் : செத்தாலும் கடனை கட்டிட்டு செத்து போங்க

விவசாயி : நீ தானே வசூல் பண்ண வருவ வா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here