கடும் போட்டியில் டாடா நிறுவனத்தின் பஞ்ச் கார்!

0
61
car

விற்பனை

இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டாடா பஞ்ச் கார் 2021ல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

மைக்ரோ எஸ்யூவி

முந்தைய நவம்பர் மாதத்தில் 6,110 பஞ்ச் கார்களை மட்டும் விற்பனை செய்திருந்தது. இதனுடன் ஒப்பிடும் போது டிசம்பர் மாதத்தில் 31.06 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த கார் மைக்ரோ எஸ்யூவி ரதத்தை சேர்ந்தது ஆகும்.

விலை

தற்போது டாடா பஞ்ச் காரின் ஆரம்ப விலை 5.49 லட்ச ரூபாயாக உள்ளது. இந்த காரின் டாப் வேரியண்டின் விலை 9.09லட்ச ரூபாயாக உள்ளது.

வசதிகள்

இந்த கார் மொத்தம் 4 வேரியன்ட்களில் கிடைக்கிறது. இதன் டாப் வேரியண்டில் ப்ரொஜெக்டர் ஹெட்லேம்புகள், விளக்குகள், அலாய் வீல்கள் என பல்வேறு வசதிகள் வழங்கப்படுகிறது. மழையில் தானாக இயங்க கூடிய வைப்பர்கள்,7 இன்ச் டச்ஸ்கிரீன், கிளைமேட் கன்ட்ரோல், கூல்டு கிளவ் பாக்ஸ் போன்ற வசதிகளும் உள்ளன.

இஞ்சின்

டாடா பஞ்ச் காரில் ஒரு இஞ்சின் உள்ளது, இது 1.2 லிட்டர் இன்லைன் 3 பெட்ரோல் இஞ்சின் ஆகும்.இந்த இஞ்சின் அதிகபட்சமாக 86 பிஎஸ் பவரையும், 113 என்எம் திறனையும் கொண்டுள்ளது. விரைவில் புதிய இஞ்சின் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எலக்ட்ரிக் வெர்சன்

டாடா ஏற்கனவே நெக்சான், டிகோர் போன்ற கார்களின் எலக்ட்ரிக் வெர்சனை விற்பனை செய்துள்ளது. டாடா அல்ட்ராஸ் காரின் எலக்ட்ரிக் வெர்சன் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. டாடா பன்ச் எலக்ட்ரிக் காரும் விற்பனைக்கு வரலாம் என கூறுகின்றனர்.

5 நட்சத்திரம்

குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் பஞ்ச் 5 நட்சத்திர ரேட்டிங்கை பெற்றுள்ளதால் தான் டாடா காரின் விற்பனை சிறப்பாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here