கர்ப்ப காலத்தில் யூடியூப் பார்த்து உடற்பயிற்சி செய்ய கூடாது!

0
81
kulanthai

கர்ப்பிணியின் தவறு

பலரும் சமூக வலைத்தளங்களில் இதை செய்தேன் நார்மல் டெலிவரி ஆனது என பல வீடியோக்களை வெளியிடுகிறார்கள். அவர்கள் சொல்வதை கேட்டு நீங்கள் இதனை முயற்சிப்பது மிகப்பெரிய தவறு.

வேலைகள்

படிக்கட்டுகளில் பலமுறை ஏறுவது, தரையை துடைப்பது, இந்தியன் கழிப்பறையில் ஒரு நாளைக்கு பல முறை உட்கார்ந்து எழும்புவது போன்றவற்றை நீங்கள் சிறுவயதில் செய்தால் பிரச்சனை எதுவும் இல்லை. சிறுவயதில் எதுவும் செய்யாமல் கர்ப்பத்தின் போது சில பயிற்சிகளை செய்தால் உடம்பில் வலிகள் ஏற்படும்.

வலிகள்

பிரசவம் ஆன பிறகு இடுப்பு பகுதியில் தொடர்ந்து வலி இருக்கும். இந்த வலியை உடனடியாக சரிசெய்யாவிட்டால், பல நாட்கள் வலியுடன் இருக்க வேண்டியதாகிவிடும்.

சமையல்

யூடியூப் பார்த்து சமையல்கள் செய்யலாம் ஆனால் உடற்பயிற்சி செய்ய கூடாது. மருத்துவ ஆலோசனைகளுடன் உடற்பயிற்சி செய்வதே சிறந்தது.

தசைகள்

கர்ப்பகாலத்தில் வயிறு பெரிதாவதால் வயிற்றின் முன் பக்கமுள்ள தசைகள் விரியும். குழந்தை பிறந்த பிறகு அவை தானாகவே சேர்ந்துவிடுகின்றன. சிலருக்கு அவை சேராமல் குடலிறக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

சில தவறுகள்

துணி, பெல்ட் ஆகியவை கட்டுவது விரிந்த எலும்புகளில் ஏற்படும் வலியை குறைப்பதற்கு மட்டுமே பயன்படும். முறையான ஆலோசனையுடன் உடற்பயிற்சி செய்தால் மட்டுமே பழைய நிலையை அடையும். இவை ஒன்றும் தெரியாமல் எடை குறைக்க ஓடுவது, ஜாகிங் செய்வது என தவறு செய்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here