காட்டு யானை தாக்கியதால் பம்பையில் பக்தர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு!

0
95
sabarimala temple

யானை கூட்டம்

பம்பை சிறியானை வட்டம் அருகே நேற்று முன்தினம் இறங்கிய யானை கூட்டத்தை விரட்ட சென்ற வனத்துறை அதிகாரி பள்ளத்தில் விழுந்து படுகாயமடைந்தார்.

நீலிமலை

பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் பாதையில் சுவாமி ஐயப்பன் ரோட்டில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு

ஆன்லைன் முன்பதிவு படி நள்ளிரவு 2 மணிக்கு முதல் செட் பக்தர்கள் செல்கின்றனர். பம்பையில் இருந்து வனத்துறை ஊழியர்கள் இவர்களுடன் குழுவாக சரல்மேடு வரை செல்கிறார்கள். சன்னிதானத்தில் இருக்கும் வனத்துறை குழுவினரும் இவர்களை கண்காணிக்கிறார்கள்.

கட்டுப்பாட்டு அறைகள்

மன்னாறகுளத்தி-பம்பை, பிலாப்பள்ளி,செழிக்குழி போன்ற இடங்களில் காட்டு யானை அடிக்கடி வருகிறது. விலங்குகளை கண்காணிக்க சன்னிதானத்தில் இரண்டு கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டு வருகிறது. சிறப்பு பயிற்சி பெற்ற யானை பறக்கும் படையினர் மற்றும் பாம்பு பிடிக்கும் ஊழியர்கள் இங்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here