காதலியை நள்ளிரவில் சந்திக்க சென்றதால் விபரீதம்! – தாலி கட்ட சொன்னவர்கள் கைது!

0
47
maanavarkal

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் கிராமத்தில் 16 வயதை உடையவர் லாவண்யா. அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இருவரும் படித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக தெரியவந்துள்ளது.

பேசிக்கொண்டிருந்த மாணவர்கள்

திங்கள்கிழமை சுந்தர் தனது நண்பர் ஒருவரின் வாகனத்தில் லாவண்யாவை சந்திக்க சென்றுள்ளார். இருட்டில் இருந்துகொண்டு இருவரும் பேசிக்கொண்டிருந்ததை சிலர் பார்த்துள்ளனர். லாவண்யாவின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இருவரும் காதலிப்பதாக விசாரணையில் தெரிந்தது.

திருமணம்

கிராமத்தில் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருந்தாலே தவறாகத்தான் பார்ப்பார்கள். இரவு நேரத்தில் இருவரையும் அருகில் இருந்த ஆலயத்துக்கு கூட்டிச்சென்று கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர்.

புகார்

இதனை கேள்விப்பட்ட சுந்தரின் அப்பா அங்கு வந்தார். மகனை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். சுந்தரின் அப்பா உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கைது

மாணவர் சுந்தர் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பள்ளி மாணவி லாவண்யாவை காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர் காவல் துறையினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here