காதல் தகராறில் நண்பனின் விரலை வெட்டிய வாலிபர்!

0
56
viral

சிவகங்கை

சிவகங்கை திருப்புவனத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் வயது 23 ஆகும். இவர் வேலை பார்த்த இடத்தில் அருள் பிரகஸ்பதி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் ஒரே அறையில் தங்கியிருந்துள்ளனர்.

சந்தேகம்

அருள் பிரகஸ்பதி ஒரு பெண்ணை அங்கு காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணுடன் கார்த்திகேயன் என்பவர் அடிக்கடி போனில் பேசுவதாக அருளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இவர்கள் இருவருக்கும் மோதல் ஏற்பட்டு நிறுவனத்தில் இருந்து விலகி விட்டனர்.

கார்த்திகேயன்

துடியலூர் அருகே வேறொரு நிறுவனத்தில் வேலைக்கு கார்த்திகேயன் சேர்ந்து விட்டார். அவருடன் போனில் பேசிய அருள் சிவனாந்தபுரம் வருமாறு கூறியுள்ளார்.

தாக்கிய நண்பன்

கார்த்திகேயன் அங்கு நம்பி சென்றுள்ளார். என் காதலியுடன் போனில் பேசக்கூடாது என மிரட்டியுள்ளார். அவர் அவ்வாறு மிரட்டி கொண்டிருக்கும் போதே கையின் கட்டைவிரலை வெட்டியுள்ளார். கார்த்திகேயனை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து தப்பிய வாலிபரை எஸ்.ஐ தேடி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here