கார்த்திகை தீபத்தை ஏற்றும் திசை

0
50

கார்த்திகை தீபம் நாட்டில் கொண்டாடும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். கார்த்திகை நட்சத்திரம் பௌர்ணமி அன்று வானில் தோன்றும். கோவில்களில் மட்டுமல்லாது வீடுகளிலும் அன்று மாலை வேளையில் தீபம் ஏற்றப்படுகிறது. அனைவரும் சந்தோசமாக வழிபடும் பண்டிகையாக இது கொண்டாடப்படுகிறது.

தீபாவளியை போலவே கார்த்திகை தீபமும் ஒரு சிறந்த பண்டிகை. கார்த்திகையை தீபம் வைத்து கொண்டாடுவதால் இதை தீபங்களின் திருவிழா என அழைப்பர்.

கார்த்திகை தீபம் என்பது கார்த்திகை மாதம் வரும் பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வருவதாகும்.

கார்த்திகை பௌர்ணமி அன்று திருக்கார்த்திகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நவம்பர் 19 ம் தேதி காலை 1.30 மணிக்கு தொடங்கி 20ம் தேதி அதிகாலை முடிவடைகிறது. தீபாவளி போன்றே இந்த நாளும் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு கார்த்திகை நாளன்றும் புதிதாக விளக்குகள் வாங்கி மாலை நேரங்களில் வீட்டில் உள்ள அனைவரும் தீபம் ஏற்றி வழிபாடும் ஒரு திருநாளாகும்.

பிரம்மாவும், விஷ்ணுவும் நானே பெரியவன் என்று பல வருடமாக போரிட்டனர். சிவபெருமான் ஜோதிப்பிழம்பாக தோன்றி காட்சியளித்தார். பிரம்மாவும், விஷ்ணுவும் சிவபெருமானையே முழுமுதற் கடவுளாக ஏற்றனர்.

rer45

இந்த கார்த்திகை நாளானது திருவண்ணாமலையில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிவன் நெருப்பு மலையாக நின்றார் என்பதற்காக தீபம் ஏற்றப்படுகிறது. 2668 அடி உயரம் கொண்டதாக இந்த மலை கூறப்படுகிறது. இந்த தீபத்தை ஏற்ற செம்பு ,இரும்பு கொப்பரையில் ஏற்றுவர். 300 கிலோவிற்கு நெய்யும், 1000 மீட்டர் காட துணியும் வைத்து இந்த தீபம் ஏற்றப்படுகிறது.

கார்த்திகை அன்று ஏற்றும் தீபங்கள் வடக்கு திசை நோக்கி இருந்தால் திருமணத்தடை அகலும் என நம்பப்படுகிறது. தெற்கு திசையை நோக்கி விளக்கு ஏற்ற கூடாது என கூறுவார்கள். வீடுகளில் குறைந்தது 27 தீபங்கள் ஏற்ற வேண்டும். குத்துவிளக்கு ஏற்றுவது சிறப்பு.

கார்த்திகை அன்று அனைவரும் தீபம் ஏற்றி கடவுளின் வரங்களை பெறுவோம். மேலும் பல நன்மைகளை பெற இந்த கார்த்திகை நாளில் தீபங்களை ஏற்றுவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here