கார் விற்பனையில் டாப் 10 இடத்தை பிடித்த கார்கள்!

0
44
car

ஹேட்ச்பேக் கார்

நல்ல மார்க்கெட் உள்ள எஸ்யூவி கார்களை போல் ஹேட்ச்பேக் கார்களும் நல்ல மார்க்கெட்டை கொண்டுள்ளன. கடந்த 2021 ல் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்கள் குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளன.

புள்ளி விவரம்

இந்தியாவில் குறிப்பாக பெரும்பாலானோர் ஹேட்ச்பேக் கார்களையே தேர்வு செய்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய சந்தையில் ஹேட்ச்பேக் கார்கள் என்றால் மாருதி சுஸுகி முதலிடத்தை பெறுகிறது.

நிறுவனங்கள்

இறுதி மாதத்தில் விற்பனையான ஹேட்ச்பேக் கார்களில் 6 கார்கள் மாருதி சுஸுகி நிறுவனத்துடையதாகவும், 3 டாடா நிறுவனத்துடையதாகவும் உள்ளது.

china india2

வேகன்ஆர் கார்

மாருதி சுஸுகியின் வேகன்ஆர் முதலிடத்தில் உள்ள நிலையில், டிசம்பரில் அதிகளவில் விற்பனையான காராகவும் அது உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 19,729 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் 2020 ம் ஆண்டை விட 11.56% அதிகமாகும்.

ஸ்விஃப்ட்

மாருதி சுஸுகி காரான ஸ்விஃப்ட் 15,661 யூனிட்களின் விற்பனை உடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. 2020 டிசம்பரில் விற்பனை செய்ததை விட கிட்டத்தட்ட 13.62% குறைந்துள்ளது.

china india3

பலேனோ

மாருதி சுஸுகியின் பிரீமியம் தரத்திலான பலேனோ மூன்றாவது இடத்தில் உள்ள நிலையில் விற்பனை 2020 ஐ விட குறைவாக உள்ளது. 2020ல் 18,030 பலேனோ கார்களை விற்பனை செய்த நிலையில் கடந்த மாதத்தில் 14,458 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மாருதி ஆல்டோ

2020 -ல் 18,140 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு ஒட்டுமொத்தமாக அதிகம் விற்பனை செய்யப்பட்ட காராக விளங்கிய மாருதி ஆல்டோ கடந்த மாதத்தில் 11,170 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்துள்ளது.

FotoJet 10

பஞ்ச்

சமீபத்திய அறிமுகமான பஞ்ச் ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் 8,008 கார்களை விற்பனை செய்துள்ளது.

ஐ10 நியாஸ்

ஹூண்டாய் மோட்டார்ஸின் ஐ10நியாஸ் 6 வது இடத்தில் உள்ளது.2020ல் 10 ஆயிரத்துக்கும் அதிகமான கார்களை ஹூண்டாய் ஐ 10நியாஸ் விற்பனை செய்தது.

i10 nikos

டாடா

7,8,9 ஆவது இடங்களில் கிட்டத்தட்ட ஒரே விற்பனை எண்ணிக்கையுடன் மாருதி சுஸுகியின் செலிரியோ, எஸ் -பிரெஸ்ஸோ, டாடா மோட்டார்ஸின் ஹேட்ச்பேக் கார்கள் உள்ளன. இந்த மூன்றின் எண்ணிக்கையும் மாற்றம் இன்றி 6,600-6,800 யூனிட்கள் என்ற அளவில் இருந்தது.

FotoJet 1 5

10 வது இடம்

டாடாவின் மலிவான ஹேட்ச்பேக் காரான டியாகோ லிஸ்டில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

diyaako

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here