காலிஸ்தான் தீவிரவாதிகள் தாக்கும் அபாயத்தால் எச்சரிக்கை நடவடிக்கை!

0
59
theeviravaathi

தீவிரவாதி

உளவுத்துறை காலிஸ்தான் தீவிரவாதிகள் தாக்க கூடும் என எச்சரித்ததால் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். காலிஸ்தான் தீவிரவாதிகள் லூதியானாவில் உள்ள நீதிமன்றத்தில் வெடிகுண்டை வெடிக்க செய்தனர்.

போலீஸ்

இன்று இரவு 2022 ம் ஆண்டு புத்தாண்டின் போது மும்பையில் தீவிரவாதிகள் தாக்க கூடும் என ரகசிய எச்சரிக்கை விடுத்துள்ளதால் அனைவரையும் உசாராக இருக்கும் படி போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தகவல்

இந்த எச்சரிக்கை காரணமாக அனைத்து போலீஸ் கமிஷ்னர்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

போலீஸ் கமிஷ்னர் கூற்று

உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து மும்பையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களின் பகுதிகளில் 3000க்கும் மேற்பட்ட ரயில்வே போலீசார் பாதுகாப்புக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விடுமுறை ரத்து

மும்பை முழுவதும் பொது இடங்களில் மக்கள் அதிக அளவில் கூட வாய்ப்புள்ளதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் போலீசார் அனைவருக்கும் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அனைத்து போலீசாரும் வெள்ளிக்கிழமை பணிக்கு வர உத்தரவினை விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here