காவலர்கள் உதவியுடன் ஓடி ஒளிந்த பழங்குடியினருக்கு தடுப்பூசி..!

0
53
thadupoosi

கிராமம்

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் பழங்குடியினர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 11 பழங்குடியின குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தில் வாகனங்கள் செல்ல முடியாமல் கரடு முரடான பாதையில் மக்கள் நடந்து சென்று வருகின்றனர்.

தடுப்பூசி

பழங்குடியின மக்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி போடுவதற்காக வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில் குழு ஏற்படுத்தப்பட்டது. இவர்கள் பகுதி தூரம் ஜீப்பிலும், மீதமுள்ள தூரம் வனப்பகுதி வழியாக நடந்தும் சென்றனர்.

பழங்குடியினர்

இவர்களை கண்டு பழங்குடியினர் பலர் ஓடி ஒளிந்து கொண்டனர். காவலர்கள் உதவியுடன் அவர்களை தேடி பிடித்து தடுப்பூசி போடும் பணியானது நடந்தது. இந்த பழங்குடி கிராமத்தில் தடுப்பூசியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here