காஷ்மீர் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள்…

0
44
veerarkal

ஜம்மு காஷ்மீர்

யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகமாகி இருக்கிறது.அவர்களை பாதுகாப்பு படைகள் வேட்டையாடி வரும் நிலையில் பாதுகாப்பு படை வீரர்களும் உயிரை தியாகம் செய்கின்றனர்.

தகவல்

தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படைகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவல் கிடைத்ததும் அந்த பகுதிகளை சுற்றிவளைத்த பாதுகாப்பு படைகள் அவர்களை சரணடையும்படி பலமுறை வாய்ப்பினை வழங்கியது.

துப்பாக்கி சூடு

வீரர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதிலடி கொடுத்த வீரர்கள் 6 தீவிரவாதிகளை கொன்றனர். பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ஐஜி விஜய்குமார் தெரிவித்தார்.

பாகிஸ்தானை சேர்ந்தவர்

இரண்டு பேர் உள்ளூரை சேர்த்தவர்கள் என்றும், இரண்டு பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும், மீதம் இருக்கும் இருவரின் அடையாளங்களை கண்டுபிடித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

மருத்துவமனை

இதில் காவலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மீண்டும் அந்த பகுதியில் துப்பாக்கிசூடு நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here